Advertisement

இரட்டை மாட்டு வண்டி பந்தயம் சீறிப்பாய்ந்த காளைகள்

மதுரை வாட்ஸ் அப் குரூப் நண்பர்கள் சார்பில் ஜல்லிக்கட்டில் போராட்டத்தில் மாணவர்கள் பெருமளவு பங்கேற்றனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மேலூர் - அழகர்கோவில் ரோட்டில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் பெரிய மாடு பந்தயத்தில் 14 ஜோடி மாடுகள் பங்கேற்றன. பல்லவராயன் பட்டி அழகு தேவர், மேலவளவு பன்னீர்செல்வம், ஆனையூர் சரவணன் ஆகியோரின் மாடுகள் 12 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை வென்று முதல் மூன்று பரிசுகளை வென்றது. சின்ன மாடு பந்தயத்தில் 21 ஜோடி மாடுகள் பங்கேற்றன. இதில் கரிசல்குளம் கருப்பு துரை, ஆலம்பட்டி பர்மா காளி, மேலூர் அழகன் கவுசிக் ஆகியோரின் மாடுகள் 9 கிலோ மீட்டர் தூரத்தை வென்று முதல் மூன்று பரிசுகளை வென்றது. வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிக்கு 2 லட்சத்து 6 ஆயிரத்து 12 ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement