Advertisement

காங் எம்பியின் ரூ.1.50 லட்சம் தங்க பேனா திருட்டு

ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா, ஆதரவு திரட்ட 30ம் தேதி சென்னை வந்தார். கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தார். அவரை, கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அப்போது விஜய் வசந்த் சட்டையில் வைத்திருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான மான்ட் பிளாங்க் (montblanc) பென் திருடப்பட்டது. இந்த பேனாவை தந்தையும், தொழிலதிபரான வசந்தகுமாரின் நினைவாக பயன்படுத்தி வந்தார். பேனா முனை தங்கத்தால் ஆனது. அதில் வைரமும் உள்ளது. விலை உயர்ந்த பேனா திருடு போனது குறித்து விஜய் வசந்த் கிண்டி போலீசில் புகார் அளித்துள்ளார். பேனாவை திருடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement