Advertisement

திரவுபதி வெற்றி பெற்றால் இந்தியாவுக்கே பெருமை!

ஐதராபாத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா செயற்குழு கூட்டத்தில் பிரதமர் பேசும்போது, ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்முவின் வாழ்க்கை பயணம் குறித்து குறிப்பிட்டார். சாதாரண பழங்குடி குடும்பத்தில் பிறந்தவர் முர்மு. பொது வாழ்க்கையில் நேர்மையை கடைபிடிப்பவர். பழங்குடிகள் நலனுக்காக மட்டுமல்லாமல் அனைத்து பிரிவினரின் முன்னேற்றத்துக்காகவும் தொடர்ந்து பாடுபட்டார். எந்த நோக்கத்துக்காக முர்மு போராடினாரோ அந்த இலக்கை அடைய அவர் தவறவில்லை என மோடி கூறினார். ஜனாதிபதி தேர்தலில் முர்முவை நிறுத்தியது வரலாற்று சிறப்புமிக்க முடிவு. அரசியல் பாகுபாடு இன்றி எடுக்கப்பட்ட முடிவு. அவர் வெற்றி பெற்றால், பழங்குடியினத்தை சேர்ந்த முதல் பெண் ஜனாதிபதி என்ற சிறப்பை பெறுவார். அது, நம் நாட்டுக்கும் பெருமை தேடி தரும் என்று பிரதமர் மோடி பேசினார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement