Advertisement

ஆன்டி இண்டியனை சந்தித்தது ஏன்? ராகுலுக்கு பா.ஜ சூடு: காங் பதிலடி

பிரிட்டன் எம்பிகளில் ஒருவர் ஜெரிமி கார்பின் Jeremy Corbyn. இவர் தொழிலாளர் கட்சியின் தலைவர். இந்தியா என்றாலே இவருக்கு ஆகாது. குறிப்பாக காஷ்மீர் பிரச்னையில் இந்தியாவுக்கு எதிராக செயல்படுபவர். பிரிட்டன் சென்ற ராகுல், லண்டனில் கார்பினை சந்தித்தது சர்ச்சையானது. இதற்கு காங்கிரஸ் விளக்கம் அளிக்க வேண்டும் என பாஜ வற்புறுத்தியது. மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு கடுமையாக சாடினார். இந்தியாவுக்கு எதிராக வெறுப்பை உமிழும் கார்பினை ராகுலால் எப்படி சந்திக்க முடிந்தது? 2 பேரும் காஷ்மீர் பிரிவினைவாதம் பற்றி விவாதித்தார்களா? இன்னும் எவ்வளவு தூரம் தான் நாட்டுக்கு எதிராக ராகுல் செயல்படுவாரோ என கிரண் ரிஜிஜு கேள்வி எழுப்பினார். 'இந்தியாவை எதிர்ப்பவர்களிடம் ராகுல் எவ்வளவு தூரம் அன்பு காட்டுகிறார் என்பதற்கு இந்த சந்திப்பே சாட்சி' என பாஜ செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா Gaurav Bhatia குற்றம்சாட்டினார். குற்றச்சாட்டுகளுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் சுர்ஜிவாலா Surjewala பதில் அளித்தார். கார்பினுடன் பிரதமர் மோடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, அவரை மோடியும் தான் சந்தித்துள்ளார்; எனவே கார்பினின் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை மோடி ஆதரிக்கிறார் என்று அர்த்தமாகி விடுமா? என கேள்வி எழுப்பினார். எல்லைகளில் அத்துமீறும் பாகிஸ்தான் பிரதமர், சீனா அதிபர் போன்றோரையும் தான் மோடி சந்தித்துள்ளார். இது குறித்தெல்லாம் கேள்வி எழுப்ப முடியுமா? என்றும் சுர்ஜிவாலா ஆதங்கப்பட்டார். #rahul #Congress #bjp #kirenRijiju #British #modi #Kashmir

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement