Advertisement

மாவட்ட காங்., தலைவரின் லீலைகள் பெண் நிர்வாகி ஆடியோவால் பரபரப்பு

தஞ்சாவூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் லோகநாதன். சமீபத்தில் மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவியாக சுபா என்பவரை நியமித்துள்ளார். இந்நிலையில், முன்னாள் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி பட்டீஸ்வரம் மீனாட்சி, லோகநாதன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வெளியிட்டுள்ளார். மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் பலருக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் கொடுத்ததால், அவர்கள் பொறுப்பில் இருந்து விலகியதாக மீனாட்சி பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. (Audio) லோகநாதனுக்கு ஆதரவாக கும்பகோணம் மாநகராட்சி மேயர்  சரவணன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மிர்சாவுதின்,  செந்தில்நாதன், சசிகுமார் ஆகியோர் வீட்டிற்கு வந்து மிரட்டல் விடுத்ததாக மீனாட்சி  பட்டீஸ்வரம் போலீசில் புகார் அளித்தார். அது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Comments Comments (1)


வாசகர் கருத்து (1)
rasaa
rasaa - atlanta,யூ.எஸ்.ஏ . 25-மே-2022 16:21 IST

இல்லாத ஒரு கட்சிக்கு இவ்வளவு பில்டப்பா?

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement