Advertisement

இந்து கடவுள்களை இழிவுபடுத்துவதா? ஸ்டாலினுக்கு எதிராக ஓபிஎஸ் கொதிப்பு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கையில் கூறியிருப்பதாவது: எந்த ஒரு மதத்தையும் இழிவுப்படுத்த இந்திய அரசமைப்பு சட்டத்தில் இடமில்லை. ஆனால், அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான சூழ்நிலை தமிழகத்தில் நிலவுவது வேதனையளிக்கிறது. சிதம்பரம் நடராஜரின் ஆனந்த தாண்டவத்தை கொச்சைப்படுத்தி U2 Brutus யு டு ப்ரூடஸ் யூ டியூப்பில் மைனர் விஜய் என்பவர் வீடியோ வெளியிட்டதை அதிமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். திமுக கடவுளுக்கு எதிரான கட்சி அல்ல என்று சொல்லும் முதல்வர், திமுகவில் இருப்பவர்களில் 90 சதவீத பேர் இந்துக்கள் என்று சொல்லும் முதல்வர் இந்துக்கடவுளை கொச்சைப்படுத்தி பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. இது, சட்டம் ஒழுங்கை சீரழிக்கவும், மத மோதல்கள் உருவாக்கவும் வழிவகுக்கும். இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய பொறுப்பு சட்டம் ஒழுங்கை கையில் வைத்திருக்கும் முதல்வருக்கு உண்டு. யு டூ ப்ரூடஸ் யூ டியூப் சேனலை தடை செய்யவும், அதற்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தரவும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யவும் முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

Comments Comments (4)


வாசகர் கருத்து (4)
Prakash Mahadevan
Prakash Mahadevan - Thiruvallur,இந்தியா . 25-மே-2022 18:18 IST

Too late

மேலும் 3 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement