Advertisement

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறப்பு 3000 கன அடி நீர் வெளியேற்றம்

குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு 19 நாட்கள் முன்னதாக மே 24ம் தேதி திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி முதல்வர் ஸ்டாலின் மேட்டூர் அணையின் வலது கரையில் மேல்பட்ட மதகுகள் பகுதியில் மின்விசையை இயக்கி மலர்தூவி சாகுபடிக்கு தண்ணீரை திறந்து வைத்தார். அமைச்சர்கள் துரைமுருகன், நேரு உள்ளிட்டோரும் பாசன நீருக்கு மலர் தூவினர். முதற்கட்டமாக அணையில் இருந்து வினாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை திறப்பால் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் 4 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும். அணை முன்கூட்டியே திறக்கப்பட்டதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement