Advertisement

கெஜ்ரிவால் - கமல் கூட்டணி தமிழகத்தில் 3வது அணியா?

ஆம் ஆத்மியின் பஞ்சாப் வெற்றியை தொடர்ந்து, கட்சியை மற்ற மாநிலங்களிலும் வளர்க்க தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ள குஜராத் சட்டசபை தேர்தலிலும் ஆம் ஆத்மியை களமிறக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளார். காங்கிரசிலிருந்து வெளியேறியுள்ள படேல் சமூக தலைவரான ஹர்திக் பட்டேல், ஆம் ஆத்மியில் சேருவார் எனவும் கூறப்படுகிறது. குஜராத்தில் பாஜவுக்கு அடுத்தபடியாக ஆம் ஆத்மியை கொண்டுவர கெஜ்ரிவால் திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார். கேரளாவிலும் மாநில கட்சியுடன் கூட்டணி அமைக்கப் போவதாக சொல்லும் கெஜ்ரிவால், விரைவில் தமிழகம் வர உள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுடன் கூட்டணி அமைக்க ஏற்பாடுகள் நடக்கிறது. இதனால் தமிழகத்தில் 3வது அணிக்கு வாய்ப்புள்ளது என்கின்றனர் ஆம் ஆத்மி கட்சியினர்.  தமிழக அரசியலில் காலூன்ற வேண்டுமானால் ஆளும் திமுகவுக்கு எதிராகத்தான்  செயல்பட வேண்டும்; அதனால் கமலுடன், பாமகவையும் கூட்டணியில் சேர்த்துக்கொள்ள கெஜ்ரிவால் யோசித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

Comments Comments (1)


வாசகர் கருத்து (1)
Sankar Ramu
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ . 22-மே-2022 18:39 IST

ஆஹா, கமல் கட்சியில இரண்டாம் தலைவர்கள்தான் இல்லைன்னு பாத்தா, முதல் தலைவரையே மாத்திடுவாங்க போல 🤣🤣

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement