Advertisement

மீனம் : ராகு, கேது பெயர்ச்சி பலன்

பூரட்டாதி 4ம் பாதம் :குடும்பத்தில் பிரச்னை

ராகு இதுவரை உங்கள் ராசிக்கு 3ம் இடமான ரிஷபத்தில் இருந்து நன்மைகளை தந்து கொண்டிருந்தார். அதாவது காரிய அனுகூலம், நல்ல வருவாயைத் தந்திருப்பார். வாழ்வில் முன்னேற்றத்தை பெற்றிருக்கலாம். இப்படி நன்மை தந்த ராகு இப்போது 2ம் இடமான மேஷத்திற்கு வருகிறார். இதனால் குடும்ப பிரச்னை, துாரதேச பயணத்தை ஏற்படுத்துவார். பொருளாதார இழப்பு உண்டாகும்.
கேது 9ம் இடமான விருச்சிக ராசியில் இருந்து பொருள் இழப்பு, காரியத்தில் தோல்வியை கண்டிருக்கலாம். அவர் இப்போது 8ம் இடமான துலாம் ராசிக்கு மாறுவதன் மூலம் விபத்து பயம், செயல் முடக்கம், உடல்நலக்குறைவு ஏற்படலாம். இருந்தாலும் ராகுவின் பின்னோக்கிய 4ம் இடத்துப்பார்வை ராசிக்கு 11ம்இடமான மகரத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சம். இதனால் பொன், பொருள் சேரும். மகிழ்ச்சி நிலைக்கும். பெண்கள் உதவிகரமாக இருப்பர். இனி விரிவான பலனைக் காணலாம்
பொதுபலன்:
மதிப்பு, மரியாதை சீராக இருக்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் தள்ளிப் போகலாம். ஆனாலும் குருவின் பார்வை துணை நிற்கும். கணவன், மனைவி இடையே அன்பு நீடிக்கும். உறவினர்கள் மத்தியில் வீண் விரோதம் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே யாரிடமும் அளவாக பேசி உறவை வலுப்படுத்திக் கொள்ளவும். வீட்டுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும். சிலருக்கு வீடு கட்டும் யோகம் வரும். புதிய வாகனம் வாங்கலாம். சகோதரிகள் ஆதரவுடன் இருப்பர். சகோதரிகளால் பண உதவி கிடைக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.

தொழில்: அதிக வருமானத்தைக் காணலாம். புதிய வியாபாரம் நல்ல லாபத்தைத் தரும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை ஏற்படும். அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்கள் சுய தொழிலில் இறங்கலாம். சேமிப்பு அதிகரிக்கும்.

பணியாளர்கள்: அதிக வேலைப்பளுவை சுமக்க வேண்டியதிருக்கும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். உழைப்புக்கு ஏற்ற வருமானத்தைக் காணலாம். சக ஊழியர்களிடமும் பகைக்காமல் நடந்து கொள்ளவும். முயற்சி எடுத்தால் மட்டுமே எதிர்பார்ப்பு நிறைவேறும். 2023 ஏப்.22க்கு பிறகு மந்த நிலை மாறும். துணிச்சல் பிறக்கும். சிலருக்கு விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கும்.

கலைஞர்கள்: விடா முயற்சியோடு உழைக்க வேண்டியதிருக்கும். எதிர்பார்த்த விருது, பாராட்டு போன்றவை கிடைப்பதில் தாமதமாகும்.
அரசியல்வாதிகள்: நல்ல வளமாக காணப்படுவர். எதையும் பணத்தால் சாதிக்கும் நிலை உருவாகும்.
மாணவர்கள்: விரும்பிய பாடம் கிடைக்க அதிகமாக முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும். உங்கள் மனதில் உள்ள வீண் குழப்பத்தால் சிலர் கல்வியில் பின்தங்கும் நிலை ஏற்படலாம். ஆனாலும் குருவின் பார்வை சாதகமாக இருப்பதால் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்படாது. ஆசிரியர்களின் ஆலோசனைப்படி நடந்தால் முன்னேற்றம் காணலாம்.
விவசாயிகள்: கரும்பு, எள், பனைத்தொழில், மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல வருமானத்தைப் பெறலாம். புதிய சொத்து வாங்கலாம். நவீன விவசாயத்தை பயன்படுத்தி முன்னேறுவர். வழக்கு விவகாரங்களில் முடிவு சாதகமாக இருக்கும்.
பெண்கள்: குடும்பத்தில் குதுாகல நிலையில் இருப்பர். குடும்பத்தாரின் அன்பை பெறுவர். பெற்றோர் வீட்டில் இருந்து உதவி கிடைக்கும். 2023 ஏப்.22க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அதிக முன்னேற்றம் கிடைக்கும். சிலர் பதவி உயர்வு காண்பர்.
உடல்நலம்: சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டாலும் பிரச்னை வராது. அவ்வப்போது மனதில் ஒரு வித தளர்ச்சி ஏற்படும்.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள். ஏழை குழந்தைகள் படிக்க இயன்ற உதவியை செய்யலாம். பத்திரகாளி அம்மனை தொடர்ந்து வணங்கி வாருங்கள். இதனால் தைரியம் கிடைக்கும். தடைகள் அகலும்.

உத்திராட்டாதி: பொருளாதார நெருக்கடி

ராகு இதுவரை உங்கள் ராசிக்கு 3ம் இடமான ரிஷபத்தில் இருந்து நன்மைகளை தந்து கொண்டிருந்தார். அதாவது காரிய அனுகூலம், நல்ல வருவாயைத் தந்திருப்பார். வாழ்வில் முன்னேற்றத்தை பெற்றிருக்கலாம். இப்படி நன்மை தந்த ராகு இப்போது 2ம் இடமான மேஷத்திற்கு வருகிறார். இதனால் குடும்ப பிரச்னை, துாரதேச பயணத்தை ஏற்படுத்துவார். பொருளாதார இழப்பு உண்டாகும்.
கேது 9ம் இடமான விருச்சிக ராசியில் இருந்து பொருள் இழப்பு, காரியத்தில் தோல்வியை கண்டிருக்கலாம். அவர் இப்போது 8ம் இடமான துலாம் ராசிக்கு மாறுவதன் மூலம் விபத்து பயம், செயல் முடக்கம், உடல்நலக்குறைவு ஏற்படலாம். இருந்தாலும் ராகுவின் பின்னோக்கிய 4ம் இடத்துப்பார்வை ராசிக்கு 11ம் இடமான மகரத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சம். இதனால் பொன், பொருள் சேரும். மகிழ்ச்சி நிலைக்கும். பெண்கள் உதவிகரமாக இருப்பர். இனி விரிவான பலனைக் காணலாம்
பொதுபலன்:
ராகு, கேது சாதகமற்ற பலனை தந்தாலும் சனி மற்றும் குரு பார்வையால் நன்மை கிடைக்கும். கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்கும். பெண்களின் ஆதரவு உண்டு. அவர்களால் பொன், பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள். ஆடம்பர வசதிகள் அதிகரிக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பின்னடைவுகள் மறையும். பெண்கள் மூலம் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

தொழில்: பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள். அது சிறப்பாக முடியும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். சிலர் வியாபார விஷயமாக வெளிநாடு சென்று வருவீர்கள். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தைத் தரும். எதிரிகளின் இடையூறுகள் வரலாம். அவர்கள் வகையில் ஒருகண் இருப்பது நல்லது. 2023 ஏப். 22க்கு பிறகு பண வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும். தொழில் ரீதியாக சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் நிலை ஏற்படலாம்.

பணியாளர்கள்: குரு பார்வையால் செல்வாக்கு மேம்படும். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்களுக்கு வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. 2023 ஏப்.22க்கு பிறகு உங்களின் திறமை பளிச்சிடும். மேலதிகாரிகளின் ஆதரவும், சகபெண் ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். இடமாற்ற பீதி மறையும்.

கலைஞர்கள்: புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சக கலைஞர்களின் ஆதரவு உண்டு
அரசியல்வாதிகள்: மக்கள் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். அந்தஸ்துடன் வாழ்வர். எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது.
மாணவர்கள்: ஆசிரியர்களின் மத்தியில் நற்பெயர் காண்பர். ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெறலாம்.
விவசாயிகள்: கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்காவிட்டாலும் உழைப்புக்கு தகுந்த பலன் கிடைக்கம். வழக்கு வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். 2023 ஏப்.22க்கு பிறகு நெல், சோளம்,கொள்ளு, கொண்டைக்கடலை, மஞ்சள், தக்காளி, பழவகைகள் மூலம் வருமானம் காண்பர். கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.
பெண்கள்: குதுாகலமாக இருப்பர். தற்போது இருப்பதை விட வசதியாக வீட்டிற்கு குடிபுகுவர். தடைபட்ட திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் குரு பார்வையால் கைகூடும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். வேலைக்குச் செல்லும் பெண்கள் பதவி உயர்வு காண்பர்.
உடல் நலம்: உஷ்ண, பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் வரலாம். மருத்துவச் செலவும் அவ்வப்போது உண்டாகும்.
பரிகாரம்: கேதுவுக்கும் அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வணங்கி வாருங்கள். அப்போது கொண்டை கடலை படைத்து தானம் செய்யவும். 2023 மார்ச் 29க்கு பிறகு சனிக்கிழமைகளில் பெருமாள் வழிபாடு நடத்துங்கள்.

ரேவதி: பணிச்சுமை அதிகரிக்கும்

ராகு இதுவரை உங்கள் ராசிக்கு 3ம் இடமான ரிஷபத்தில் இருந்து நன்மைகளை தந்து கொண்டிருந்தார். அதாவது காரிய அனுகூலம், நல்ல வருவாயைத் தந்திருப்பார். வாழ்வில் முன்னேற்றத்தை பெற்றிருக்கலாம். இப்படி நன்மை தந்த ராகு இப்போது 2ம் இடமான மேஷத்திற்கு வருகிறார். இதனால் குடும்ப பிரச்னை, துாரதேச பயணத்தை ஏற்படுத்துவார். பொருளாதார இழப்பு உண்டாகும்.
கேது 9ம் இடமான விருச்சிக ராசியில் இருந்து பொருள் இழப்பு, காரியத்தில் தோல்வியை கண்டிருக்கலாம். அவர் இப்போது 8ம் இடமான துலாம் ராசிக்கு மாறுவதன் மூலம் விபத்து பயம், செயல் முடக்கம், உடல்நலக்குறைவு ஏற்படலாம். இருந்தாலும் ராகுவின் பின்னோக்கிய 4ம் இடத்துப்பார்வை ராசிக்கு 11ம் இடமான மகரத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சம். இதனால் பொன், பொருள் சேரும். மகிழ்ச்சி நிலைக்கும். பெண்கள் உதவிகரமாக இருப்பர். இனி விரிவான பலனைக் காணலாம்
பொதுபலன்
குடும்பத்தில் வசதிகள் பெருகும். உங்கள் ஆற்றல் மேம்படும். பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். பெண்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். பண வரவு கூடும். உறவினர் வகையில் அனுகூலமான போக்கு காணப்படும். திருமணம் போன்ற சுப காரியங்கள் தடைபடலாம். அதே நேரம் குருவின் பார்வையால் தீவிர முயற்சியின் பேரில் நடக்கலாம்.
உத்தியோகம் பார்ப்பவர்கள் முன்புபோல் சிறப்பான பலனை எதிர்பார்க்க முடியாது. வேலைப்பளு அதிகரிக்கும். சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. ஆனால் நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காமல் போகலாம். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். உங்கள் பொறுப்புகளை யாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். கோரிக்கைகளை அதிக முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியது இருக்கும். 2023 ஏப்ரல் 22-ந் தேதிக்கு பிறகு குருவால் சிறப்பான பலனை எதிர் பார்க்கலாம். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம் பதவி உயர்வு காண்பர். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
வியாபாரம் பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். தானிய வியாபாரம் சிறப்பாக இருக்கும். 2023 மார்ச் 29-ந் தேதிக்கு பிறகு புதிய தொழில் தற்போது தொடங்க வேண்டாம். எதையும் ஒன்றுக்கு 10 முறை சிந்தித்து செயல்படுத்துவது நல்லது. குரு பலமாக இருப்பதால் பணவிஷயத்தில் எந்த கஷ்டமும் வராது.
கலைஞர்கள் தீவிர முயற்சி எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் பெறமுடியும். அரசியல்வாதிகள் மற்றும் பொதுநல ஊழியர்கள் பதவியை எதிர்பாராமல் பாடுபட வேண்டியதிருக்கும்.
மாணவர்கள்சிரத்தை எடுத்து படிக்க வேண்டும்.குருவின் பார்வையால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. 2023 ஏப்ரல் 22-ந் தேதிக்கு பிறகு முன்னேற்றம் காணலாம். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்.
விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற பலனைத் தான் பெற முடியும். 2023 மார்ச் 29-ந் தேதிக்கு பிறகு அதிக முதலீடு பிடிக்கும் விவசாயம் எதையும் செய்ய வேண்டாம். பண்ணை தொழில் கால்நடை மூலமும் அதிக வருவாயை எதிர்பார்க்கலாம். வழக்கு விவகாரங்கள் சுமாராக இருக்கும்.
பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர்.சகோதரிகள் மூலம் உதவிகள் அதிகமாக கிடைக்கும். திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு குருவின் பார்வையால் திருமணம் கைகூடும் அதுவும் நல்ல வரனாக அமையும்.கணவரின் அன்பு கிடைக்கும்.வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். புதிய பதவி தேடி வரும்.
உடல்நலம் சிலர் மனத்தளர்ச்சியுடன் காணப்படுவர்.
பரிகாரம்: ராகு கால பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள். குரு பகவானுக்கு முல்லை மலர் மாலை அணிவித்து வணங்குங்கள். 2023 மார்ச் 29-ந் தேதிக்கு பிறகு சனிபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள்.

Advertisement
Advertisement
 
Advertisement