மூலம்: அபார ஆற்றல்
ராகு இதுவரை 6ம் இடமான ரிஷப ராசியில் இருந்து நன்மைகளை தந்து கொண்டிருந்தார். உடல் ஆரோக்கியத்தையும், காரிய அனுகூலத்தையும் தந்திருப்பார். இப்போது ராகு 5ம் இடமான மேஷத்திற்கு வருகிறார். இது சிறப்பான இடம் அல்ல. அவர் 5ம் இடத்தில் இருக்கும் போது, பல்வேறு இன்னல்களை தரலாம். மனைவி, மக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை உருவாக்கலாம். குடும்பத்தில் பிரச்னையை உருவாக்கலாம். மனதில் இனம் புரியாத வேதனை உருவாகலாம். ஆனால் அவரது பின்னோக்கிய 7ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 11ம் இடமான துலாம் ராசியில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதன் மூலம் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். அதே நேரம் சாதகமற்ற இடத்தில் இருந்த கேது நன்மை தரும் இடத்துக்கு மாறுகிறார். அவர் இதுவரை 12ம் இடமான விருச்சிக ராசியில் இருந்து பொருள் இழப்பை தந்துகொண்டிருந்தார். இப்போது 11ம் இடமான துலாம் ராசிக்கு சென்று பொருள் வளம், ஆரோக்கியத்தைக் கொடுப்பார். குடும்பத்தில் மேன்மையை உண்டாக்குவார். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் அபார ஆற்றலையும் கொடுப்பார். இனி விரிவான பலனைக் காணலாம்
பொதுபலன்: கேதுவால் எந்த பிரச்னையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாண்பீர்கள். இதனால் மனதில் துணிச்சல் பிறக்கும். பணவரவு அதிகரிக்கும். உறவினர் வகையில் வாக்குவாதத்தை தவிர்க்கவும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க அனுகூலம் உண்டு.
தொழில்: வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம். மனைவி பெயரில் உள்ள தொழில்கள் சிறப்படையும். 2023 மார்ச் 29க்கு பிறகு அதிக வருமானத்தைக் காணலாம். புதிய வியாபாரம் லாபத்தைத் தரும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை ஏற்படும். கணினித் தொழில், அச்சுத் தொழில், பத்திரிகை, தரகு தொழில்கள் சிறப்பான வளர்ச்சி பெறும். தங்கம், வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் கூடுதல் லாபத்தை பெறுவர்.
பணியாளர்கள்: சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பர். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள், தனியார் துறையினருக்கு வேலைப்பளு அதிகரிக்கும். சிலர் வேலையில் அதிக ஆர்வம் இல்லாமல் இருக்கலாம். அவர்கள் குருவழிபாடு செய்வது அவசியம். 2023 ஏப். 22க்கு பிறகு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். விரும்பிய கோரிக்கைகள் நிறைவேறும். வக்கீல்கள் தாங்கள் நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கப் பெறுவர்.
கலைஞர்கள்: புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க பெறுவர். ரசிகர்கள் மத்தியில் புகழ், பாராட்டு கிடைக்கும்.
அரசியல்வாதிகள்: எதிர்பார்த்த பதவி கிடைக்கும். சிலர் பெண்கள் மூலம் உயர்ந்த அந்தஸ்தை பெறுவர். அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும்.
மாணவர்கள்: படிப்பில் அசட்டையாக இருந்து விட வேண்டாம். 2023 ஏப்.22க்கு பிறகு சிறப்பான நன்மை கிடைக்கும். தேர்வில் கூடுதல் மதிப்பெண் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர்.
விவசாயிகள்: பயறு வகைகளில் நல்ல வருமானம் கிடைக்கும். கோழி, ஆடு வளர்ப்பில் எதிர்பார்த்த பலனைப் பெறலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும். 2023 மார்ச் 29க்கு பிறகு வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பசுவளர்ப்பிலும் போதிய வருமானத்தை பெறலாம்.
பெண்கள்: தோழிகளால் உதவி கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் முக்கிய பொறுப்புகளை மற்றவரிடம் ஒப்படைக்க வேண்டாம். சுய தொழிலில் ஈடுபடும் பெண்கள் நல்ல முன்னேற்றம் அடைவர். பெண் காவலர்களுக்கு புதிய பதவி தேடி வரும். 2023 ஏப். 22க்கு பிறகு கன்னியருக்கு திருமணம் கைகூடும்.
உடல்நலம்: நீண்ட கால நோயால் அவதிப்பட்டவர்கள் பூரண குணம் பெறுவர். மருத்துவச் செலவு பெருமளவு குறையும்.
பரிகாரம்: சுவாதியன்று லட்சுமி நரசிம்மரை வழிபடுங்கள். நாக தேவதையை வணங்கி வாருங்கள். ராகுவுக்கு நீல நிற வஸ்திரத்தை சாத்தி அர்ச்சனை செய்யுங்கள் ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். சாப்பிடும் முன்பு காக்கைக்கு அன்னமிடுங்கள்.
பூராடம்: சுபநிகழ்சி நடந்தேறும்
ராகு இதுவரை 6ம் இடமான ரிஷப ராசியில் இருந்து நன்மைகளை தந்து கொண்டிருந்தார். உடல் ஆரோக்கியத்தையும், காரிய அனுகூலத்தையும் தந்திருப்பார். இப்போது ராகு 5ம் இடமான மேஷத்திற்கு வருகிறார். இது சிறப்பான இடம் அல்ல. அவர் 5ம் இடத்தில் இருக்கும் போது பல்வேறு இன்னல்களை தரலாம். மனைவி, மக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை உருவாக்கலாம். குடும்பத்தில் பிரச்னையை உருவாக்கலாம். மனதில் இனம் புரியாத வேதனை வரலாம். ஆனால் அவரது பின்னோக்கிய 7ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 11ம் இடமான துலாம் ராசியில் விழுகிறது. இது சிறப்பான அம்சம். இதன் மூலம் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். பெண்கள் உறுதுணையாக இருப்பர்.
அதே நேரம் சாதகமற்ற இடத்தில் இருந்த கேது நன்மை தரும் இடத்துக்கு மாறுகிறார். அவர் இதுவரை 12ம் இடமான விருச்சிக ராசியில் இருந்து பொருள் இழப்பை தந்து கொண்டிருந்தார். இப்போது 11ம் இடமான துலாம் ராசிக்கு சென்று பொருள் வளம், ஆரோக்கியத்தைக் கொடுப்பார். குடும்பத்தில் மேன்மையை உண்டாக்குவார். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றலையும் கொடுப்பார். இனி விரிவான பலனைக் காணலாம்
பொதுபலன்:
குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்கலாம். 2023 ஏப்.22 க்கு பிறகு குருவால் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சகோதரிகள் ஆதரவுடன் செயல்படுவர். அவர்களால் பண உதவி கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். திருட்டு, களவு போன்ற இடர்பாடுகள் மறையும்.
தொழில்: வியாபாரிகள் முன்னேற்றம் காண்பர். வியாபார விஷயமாக அடிக்கடி வெளியூர் பயணம் சென்று வருவர். 2023 மார்ச் 29க்கு பிறகு எதிரிகளால் இருந்த முட்டுக்கட்டைகள் விலகும். தொழில் வளர்ச்சிமுகமாக இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். புதிய வியாபாரம் நல்ல அனுகூலத்தை தரும். பெண்கள் வகையில் அனுகூலம் ஏற்படும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் பெறும்.
பணியாளர்கள்:
போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் மேன்மை காண்பர். மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும். வேலைப்பளு குறையும். தனியார் துறை பணியாளர்களுக்கு வேலைப்பளு இருக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். 2023 ஏப்.22க்கு பிறகு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வக்கீல்களுக்கு வழக்கு, விவகாரங்களில் முடிவு சாதகமாக அமையும்.
கலைஞர்கள்: புதிய ஒப்பந்தத்திற்காக விடாமுயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். 2023 ஏப். 22க்கு பிறகு இடர்ப்பாடுகள் மறையும்.
அரசியல்வாதிகள்: எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். தலைமையின் ஆதரவுடன் எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.
மாணவர்கள்: சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. 2023 ஏப்.22க்கு பிறகு குரு சாதகமாக இருப்பதால் ஆசிரியரின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர்.
விவசாயிகள்: பாசிப்பயறு, நெல், கொள்ளு, துவரை, கொண்டைக்கடலை, சோளம், மஞ்சள், தக்காளி, பழ வகைகள் மூலம் நல்ல வருமானம் கொடுக்கும். கால்நடை செல்வம் பெருகும். பக்கத்து நிலத்துக்காரர்கள் உதவிகரமாக இருப்பர். புதிய சொத்து வாங்க யோகமுண்டு. 2023 மார்ச் 29க்கு பிறகு வழக்கு விவகாரங்களில் முடிவு சாதகமாக இருக்கும்.
.
பெண்கள்: சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. 2023 ஏப். 22க்கு பிறகு குருவால் சுபநிகழ்ச்சிகள் கைகூடும். சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்களால் பண வரவு அதிகரிக்கும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சுயதொழில் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.
உடல்நிலை: ஆரோக்கியம் மேம்படும். உடல்நிலை சிறப்பாக இருக்கும். மனதில் ஏற்பட்ட தளர்ச்சி மறையும்.
பரிகாரம்: பைரவர் வழிபாடு நன்மையளிக்கும். ஏழைகளுக்கு உளுந்து தானம் செய்யுங்கள். சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். அனுமன் வழிபாடு உங்கள் வாழ்வில் தடையை அகற்றி முன்னேற்றத்தை கொடுக்கும்.
உத்திராடம் 1ம் பாதம்: நினைத்தது நிறைவேறும்
ராகு இதுவரை 6ம் இடமான ரிஷப ராசியில் இருந்து நன்மை தந்து கொண்டிருந்தார். உடல் ஆரோக்கியத்தையும், காரிய அனுகூலத்தையும் தந்திருப்பார். இப்போது ராகு 5ம் இடமான மேஷத்திற்கு வருகிறார். இது சிறப்பான இடம் அல்ல. அவர் 5ம் இடத்தில் இருக்கும் போது பல்வேறு இன்னல்களை தரலாம். மனைவி, மக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கலாம். குடும்பத்தில் பிரச்னையை உருவாக்கலாம். மனதில் இனம் புரியாத வேதனை வரலாம். ஆனால் அவரது பின்னோக்கிய 7ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 11ம் இடமான துலாம் ராசியில் விழுகிறது. இது சிறப்பான அம்சம். இதன் மூலம் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்கள் உறுதுணையாக இருப்பர்.
அதே நேரம் சாதகமற்ற இடத்தில் இருந்த கேது நன்மை தரும் இடத்துக்கு மாறுகிறார். அவர் இதுவரை 12ம் இடமான விருச்சிக ராசியில் இருந்து பொருள் இழப்பை தந்து கொண்டிருந்தார். இப்போது 11ம் இடமான துலாம் ராசிக்கு சென்று பொருள் வளம், ஆரோக்கியத்தைக் கொடுப்பார். குடும்பத்தில் மேன்மையை உண்டாக்குவார். நினைத்ததை வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றலைக் கொடுப்பார். இனி விரிவான பலனைக் காணலாம்
பொதுபலன்:
இன்னல்களில் இருந்து விடுபடுவீர்கள். மனதில் உற்சாகம் பிறக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். 2023 ஏப். 22க்கு பிறகு உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். அதுவும் நல்ல வரனாக அமையும். புதுமணத் தபம்திகள் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர்.
இது பொற்காலம் எனச் சொல்லும் அளவுக்கு முன்னேற்றம் காணலாம். நல்ல பொருளாதார வளம் இருக்கும். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் மீதான பொல்லாப்பு மறையும்.
தொழில்:
வியாபாரிகள் கடந்த காலத்தை விட முன்னேற்றம் காண்பர். புதிய தொழில் அனுகூலத்தைத் தரும். கணிசமான லாபத்தால் சேமிப்பு அதிகரிக்கும். 2023 மார்ச் 29க்கு பிறகு வேலை இன்றி இருப்பவர்கள் புதிய தொழில் தொடங்கலாம். தங்கம், வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் கூடுதல் லாபத்தை பெறுவர்.
பணியாளர்கள்:
முன்னேற்றம் காண்பர். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். சிலருக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும். 2023 ஏப். 22க்கு பிறகு படித்து விட்டு வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.
கலைஞர்கள்: புதிய தெம்புடன் காணப்படுவர். ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ரசிகர்களின் மத்தியில் புகழ், பாராட்டு கிடைக்கும்.
அரசியல்வாதிகள்: வாழ்வில் மேம்பாடு காண்பர். அவர்களுக்கு தலைமையின் ஆதரவால் பதவி கிடைக்கும்.
மாணவர்கள்: சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. 2023 ஏப். 22க்கு பிறகு சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும்.
விவசாயிகள்: . புதிய சொத்து வாங்கலாம். சிலர் நவீன முறை விவசாயத்தில் ஈடுபட்டு அதிக மகசூல் காண்பர். நெல், கோதுமை சோளம், மொச்சை, மானாவாரி பயிர்கள் மூலம் வருமானம் உயரும். 2023 ஏப். 22க்கு பிறகு கால்நடை செல்வம் பெருகும். வழக்கு, விவகாரங்களில் முடிவு சாதகமாக அமையும்.
பெண்கள்: முன்னேற்றம் காண்பர். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர். சிலர் புதிய வீடு, மனை வாங்க யோகம் உண்டு. 2023 ஏப். 22க்கு பிறகு வீட்டில் வசதிகள் பெருகும். ஆடம்பர பொருட்களை வாங்கலாம். கணவன், மனைவி இடையே அன்பு கூடும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். சுய தொழில் புரியும் பெண்கள் எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தை காணலாம்.
உடல்நலம்: கேதுவால் ஏற்பட்ட உஷ்ண, பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் மறையும். உடல் பூரண குணம் அடையும். மருத்துவச் செலவு வெகுவாக குறையும்.
பரிகாரம்: மாரியம்மனை வழிபட்டால் மனக்கவலைகள் தீரும். ராகு சாதகமற்ற நிலையில் இருப்பதால் அவருக்கு அர்ச்சனை செய்யுங்கள். பாம்பு புற்றுள்ள கோவிலுக்குச் சென்று பால் ஊற்றுங்கள். சன்னியாசிகளுக்கும் இயன்ற உதவி செய்யலாம்.