Advertisement

விருச்சிகம் : ராகு, கேது பெயர்ச்சி பலன்.. முன்னேற்றமான காலம், தொழிலில் வளர்ச்சி

விசாகம் 4-ம் பாதம்: முன்னேற்றமான காலம்

இந்த ராகு, கேது பெயர்ச்சியால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். இதுவரை ராகு, கேதுவும் சாதகமற்ற இடத்தில் இருந்து பின்னடைவை தந்திருப்பர். ராகு ராசிக்கு 7ம் இடமான ரிஷபத்தில் இருந்து இன்னல்களை தந்து கொண்டிருந்தார். குறிப்பாக இடம் விட்டு இடம் பெயரும் சூழ்நிலையை உருவாக்கி இருப்பார். தரம் தாழ்ந்தவர்களுடன் சேர வைத்து செல்வாக்கை குறைத்திருப்பார். அப்படிப்பட்ட ராகு இப்போது 6ம் இடமான மேஷத்திற்கு வருகிறார். தீயோர் சேர்க்கையில் இருந்து விடுவித்து முன்னேற்றத்துக்கு வழிவகுப்பார். காரிய அனுகூலத்தை கொடுப்பார். அவரது பின்னோக்கிய 4ம் இடத்துப்பார்வை ராசிக்கு 3இடமான மகரத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சம். இதனால் நன்மை கிடைக்கும். பொருளாதார வளம், குடும்பத்தில் மகிழ்ச்சி, தொழில் விருத்தியை தருவார். கேது இதுவரை உங்கள் ராசியில் இருந்து உடல் உபாதை, அரசு வகையில் பிரச்னையை தந்திருப்பார். இப்போது கேது ராசிக்கு 12ம் இடமான துலாம் ராசிக்கு செல்கிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. இதனால் பொருள் விரயம் ஏற்படலாம். உடல் உபாதை வரலாம். கேதுவின் பின்னோக்கிய 7 ம் இடத்துப்பார்வை ராசிக்கு 6ம் இடமான மேஷத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சம். இதனால் அபார ஆற்றல் பிறக்கும். பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர் சதி எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும்.இனி விரிவான பலனை காணலாம்.

பொதுபலன்: பொருளாதார வளம் மேம்படும். எண்ணற்ற நன்மை கிடைக்கும். தடைகளை முறியடித்து எடுத்த காரியத்தில் வெற்றி காண்பீர்கள். சமூக மதிப்பு உயரும். அவப்பெயர் மறைந்து செல்வாக்கு அதிகரிக்கும். வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். கடந்த காலத்தில் இருந்த பிரச்னைகளும், பிணக்குகளும் மறையும். வீட்டுக்கு தேவையான வசதி வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவர். சிலர் புதிய வீடு வாங்குவர். அல்லது வசதியான வீட்டிற்கு குடி புகுவர். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். புதுமணத் தம்பதிகள் குழந்தை பாக்கியம் பெறுவர். 2023 ஏப்.22க்கு பிறகு தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது.

தொழில்: வியாபாரிகள் நல்ல முன்னேற்றம் காண்பர். பணப்புழக்கம் அதிகரிக்கும். குருவால் புதிய தொழில் முயற்சியைத் தொடங்கலாம். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீ்ர்கள்.

பணியாளர்கள்:
கடந்த காலத்தில் இருந்த பிற்போக்கான நிலை மாறும். சிறப்பான முன்னேற்றம் காணலாம். வேலைப்பளு குறையும். புதியபதவி வர வாய்ப்புண்டு. விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கப் பெறலாம். சிலருக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும். வேலையை இழந்தவர்கள் மீண்டும் வேலை கிடைக்கப் பெறுவர்.

கலைஞர்கள்: பணவரவு சிறப்பாக இருக்கும். புகழ், பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
அரசியல்வாதிகள்: நற்பெயரும், புகழும் கிடைக்கப் பெறுவர். இதுவரை இருந்த தடை தோல்வி இனி இருக்காது.
மாணவர்கள்: இந்த கல்வி ஆண்டில் முன்னேற்றமான பலன் காண்பர். கடந்த ஆண்டு இருந்த தேக்கநிலை இருக்காது. விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பும் சிலருக்கு கிடைக்கும்.
விவசாயிகள்: முன்னேற்றமான பலனை காண்பர். நெல், கோதுமை சோளம், மொச்சை. கரும்பு, எள் பனைத் தொழில் மூலம் வருமானம் காண்பர். வழக்கு விவகாரங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். கைவிட்டு போன சொத்துக்கள் மீண்டும் கிடைக்க வாய்ப்புண்டு.
பெண்கள்: மணமான பெண்கள் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர். புத்தாடை அணிகலன்கள் வாங்குவர். கணவர் மற்றும் குடும்பத்தாரின் மத்தியில் மதிப்பு உயரும்.
உடல்நலம்: ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். மருத்துவச் செலவும் ஏற்பட வாய்ப்புண்டு.
பரிகாரம்: கேது சாதகமற்ற நிலையில் இருப்பதால் பத்திரகாளியம்மனை வழிபடுங்கள். கேதுவுக்கு சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி அர்ச்சனை செய்யுங்கள். சதுர்த்தியன்று விநாயகரை வழிபடுவது நன்மை தரும்.

அனுஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி

இந்த ராகு, கேது பெயர்ச்சியால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். இதுவரை ராகு, கேதுவும் சாதகமற்ற இடத்தில் இருந்து பின்னடைவை தந்திருப்பர். ராகு ராசிக்கு 7ம் இடமான ரிஷபத்தில் இருந்து இன்னல்களை தந்து கொண்டிருந்தார். குறிப்பாக இடம் விட்டு இடம் பெயரும் சூழ்நிலையை உருவாக்கி இருப்பார். தரம் தாழ்ந்தவர்களுடன் சேர வைத்து செல்வாக்கை குறைத்திருப்பார். அப்படிப்பட்ட ராகு இப்போது 6ம் இடமான மேஷத்திற்கு வருகிறார். தீயோர் சேர்க்கையில் இருந்து விடுவித்து முன்னேற்றத்துக்கு வழிவகுப்பார். காரிய அனுகூலத்தை கொடுப்பார். அவரது பின்னோக்கிய 4ம் இடத்துப்பார்வை ராசிக்கு 3இடமான மகரத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சம். இதனால் நன்மை கிடைக்கும். பொருளாதார வளம், குடும்பத்தில் மகிழ்ச்சி, தொழில் விருத்தியை தருவார். கேது இதுவரை உங்கள் ராசியில் இருந்து உடல் உபாதை, அரசு வகையில் பிரச்னையை தந்திருப்பார். இப்போது கேது ராசிக்கு 12ம் இடமான துலாம் ராசிக்கு செல்கிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. இதனால் பொருள் விரயம் ஏற்படலாம். உடல் உபாதை வரலாம். கேதுவின் பின்னோக்கிய 7 ம் இடத்துப்பார்வை ராசிக்கு 6ம் இடமான மேஷத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சம். இதனால் அபார ஆற்றல் பிறக்கும். பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர் சதி எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும்.இனி விரிவான பலனை காணலாம்.
பொதுபலன்: முயற்சிகளில் இருந்த தடைகள் அனைத்தும் மறையும். ராகு, சனி, குருவால் நன்மைகள் அதிகரிக்கும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். மனதில் மகிழ்ச்சி நிலவு்ம. வாகன பயணத்தால் நன்மை கிடைக்கும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். சகோதரிகள் உறுதுணையாக இருப்பர். குழந்தை பாக்கியம் கிட்டும். உறவினர் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.
தொழில்: கடந்தகாலத்தில் எதிரிகளின் இடையூறுகள் உங்களை அவ்வப்போது பாடாய்படுத்தி இருக்கும். இனி அந்த நிலை இருக்காது. தடையின்றி முன்னேறலாம். தீயோர் சேர்க்கையால் அவதிப்பட்டு வந்தர்கள் அவர்களின் பிடியில் இருந்து விடுபடுவர். இரும்பு, அச்சு தொடர்பான தொழில்கள் சிறந்து விளங்கும். தங்கம், வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தைப் பெறுவர். கேதுவின் பார்வையால் உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். பொருளாதார வளம் அதிகரிக்கும்.
பணியாளர்கள்: அதிகாரிகள் அனுசரணையாக இருப்பர். சகபெண் ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். விரும்பிய பணி, இடமாற்றம் கிடைக்கும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு வேலையில் எந்தவித தொய்வும் இருக்காது. கலைஞர்கள்: திருப்திகரமான பலனைக் காண்பர். தொழில் ரீதியாக அடிக்கடி வெளியூர் செல்ல நேரிடும்.
அரசியல்வாதிகள்: எதிர்பார்த்த பதவி கிடைக்கும். மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். தொண்டர்களின் மத்தியில் நற்பெயர் காண்பர்.
மாணவர்கள்: தீயவர்களின் சகவாசத்தால் அலைக்கழிந்தவர்கள் இனி நல்ல புத்தியோடு செயல்படுவர். கல்வி வளர்ச்சிக்கான சூழல் நிலவும். குரு சாதகமாக இருப்பதால் ஆசிரியர்களின் அறிவுரை கைகொடுக்கும். போட்டிகளில் வெற்றி பெற்று பரிசு கிடைக்கப் பெறுவர்.
விவசாயிகள்: எள், கரும்பு, உளுந்து, மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்புண்டு. கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் உண்டு பக்கத்து நிலகாரர்கள் வகையில் இருந்த தொல்லைகள் மறையும். வழக்கு விவகாரங்கள் திருப்திகரமாக இருக்கும்.
பெண்கள்: வாழ்வில் முன்னேற்றம் அடைவர். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கி குவிப்பர். பிறந்த வீட்டில் இருந்து உதவிகள் வரும். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். அண்டை வீட்டார்கள் உதவிகரமாக இருப்பர். தம்பதி இடையே ஒற்றுமை மேம்படும். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். பதவி உயர்வு கிடைக்கும்.
உடல்நிலை: கேதுவால் பித்தம், மயக்கம் போன்ற பிரச்னைகள் வரலாம். உடற்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது.
பரிகாரம்: கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஏழைகளுக்கு கொள்ளு தானம் செய்யுங்கள். ஏழை மாணவர்களின் படிப்புச் செலவுக்கு உதவுங்கள். துறவிகளுக்கு காணிக்கை செலுத்தி ஆசி பெறலாம்.

கேட்டை: தொழிலில் வளர்ச்சி

இந்த ராகு, கேது பெயர்ச்சியால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். இதுவரை ராகு, கேதுவும் சாதகமற்ற இடத்தில் இருந்து பின்னடைவை தந்திருப்பர். ராகு ராசிக்கு 7ம் இடமான ரிஷபத்தில் இருந்து இன்னல்களை தந்து கொண்டிருந்தார். குறிப்பாக இடம் விட்டு இடம் பெயரும் சூழ்நிலையை உருவாக்கி இருப்பார். தரம் தாழ்ந்தவர்களுடன் சேர வைத்து செல்வாக்கை குறைத்திருப்பார். அப்படிப்பட்ட ராகு இப்போது 6ம் இடமான மேஷத்திற்கு வருகிறார். தீயோர் சேர்க்கையில் இருந்து விடுவித்து முன்னேற்றத்துக்கு வழிவகுப்பார். காரிய அனுகூலத்தை கொடுப்பார். அவரது பின்னோக்கிய 4ம் இடத்துப்பார்வை ராசிக்கு 3இடமான மகரத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சம். இதனால் நன்மை கிடைக்கும். பொருளாதார வளம், குடும்பத்தில் மகிழ்ச்சி, தொழில் வளர்ச்சியை தருவார். கேது இதுவரை உங்கள் ராசியில் இருந்து உடல் உபாதை, அரசு வகையில் பிரச்னையை தந்திருப்பார். இப்போது கேது ராசிக்கு 12ம் இடமான துலாம் ராசிக்கு செல்கிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. இதனால் பொருள் விரயம் ஏற்படலாம். உடல் உபாதை வரலாம். கேதுவின் பின்னோக்கிய 7 ம் இடத்துப்பார்வை ராசிக்கு 6ம் இடமான மேஷத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சம். இதனால் அபார ஆற்றல் பிறக்கும். பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர் சதி எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும்.இனி விரிவான பலனை காணலாம்.

பொதுபலன்: முயற்சிகள் சிறப்பாக முடியும். சில தடைகள் வந்தாலும் அதை எளிதில் முறியடிபீர்கள். குடும்பத்தில் வசதிகள் அதிகரிக்கும். தடைபட்ட திருமணம் கைகூடும். புதிய வீடு, வாகனம் வாங்கலாம். பொருளாதார வளம் அதிகரிக்கும். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறையும்.

தொழில்: லாபம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும். எதிரிகளின் சதி உங்களிடம் எடுபடாமல் போகும். அரசிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கேதுவால் பொருள் விரயத்துக்கு வாய்ப்பு உள்ளது. கவனம் தேவை. 2023 மார்ச் 29க்கு பிறகு குடும்ப பிரச்னையை தொழிலில் காட்டாமல் உழைத்தால் முன்னேறலாம்.

பணியாளர்கள்: இதுவரை பட்டபாடுகள் அனைத்தும் இடம் தெரியாமல் மறையும். வேலைப்பளு குறையும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். பதவிஉயர்வு. சம்பள உயர்வு கிடைக்கும். படித்துவிட்டு வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.

கலைஞர்கள்: இதுவரை உங்களுக்கு திறமைக்கு ஏற்ற மதிப்பு கிடைக்காமல் இருந்திருக்கலாம். அந்த பின்தங்கிய நிலை மாறுபடும். நல்ல பணவரவு இருக்கும். படிப்படியாக உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
அரசியல்வாதிகள்: பொதுநல வாழ்வில் மேம்பாடு அடைவர். பணவசதி பெருகும். எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.
மாணவர்கள்: சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பர். நல்ல மதிப்பெண் பெறலாம். தேர்வில் வெற்றி கிடைக்கும். விரும்பிய பாடப்பிரிவில் சேரும் வாய்ப்பு கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிப்பர்.
விவசாயிகள்: நெல், எள், உளுந்து, கொண்டைக்கடலை, சோளம், மஞ்சள், மானாவாரி பயிர்கள் மூலம் சிறப்பான மகசூல் கிடைக்கும். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்புண்டு. பால்பண்ணை மூலமும் நல்ல வருமானம் கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் முடிவு சாதகமாக அமையும். கைவிட்டு போன சொத்துக்கள் மீண்டும் கிடைக்க வாய்ப்புண்டு.

பெண்கள்: கன்னிப் பெண்களுக்கு திருமணம் கைகூடும் அதுவும் நல்ல வரனாக அமையும். பிறந்த வீடு, உறவினர்கள் வகையில் இருந்த பிரச்னை மறையும். ஆன்மிக சுற்றுலா செல்லும் வாய்ப்பு கிடைக்கும். தோழிகள் உறுதுணையாக இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். வியாபாரம் செய்யும் பெண்கள் லாபத்தை பெருக்குவர்.
உடல்நிலை: உடல்நலம் சிறக்கும். நீண்ட கால நோய் கூட பறந்தோடும். மருத்துவச் செலவு பெருமளவு குறையும்.
பரிகாரம்: கேதுவுக்கு சிவப்பு நிற வஸ்திரத்தை சாத்தி அர்ச்சனை செய்யுங்கள். பத்திரகாளி அம்மனையும் வழிபட்டு வாருங்கள். 2023 மார்ச் 29க்கு பிறகு சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுங்கள். சந்தர்ப்பம் கிடைத்தால் யானைக்கு உணவு கொடுங்கள்.

Advertisement
Advertisement
 
Advertisement