Advertisement

கன்னி : ராகு, கேது பெயர்ச்சி பலன்.. ஆடம்பரத்தில் நாட்டம்

உத்திரம் 2.3,4-ம் பாதம்: ஆடம்பரத்தில் நாட்டம்

ராகு 9-ம் இடமான ரிஷப ராசியில் இருந்து காரியத் தடங்கலை ஏற்படுத்தி வந்தார். எதிரிகளால் இடையூறு ஏற்பட்டிருக்கலாம். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பீர்கள். இப்போது ராகு 8ம் இடமான மேஷத்திற்கு செல்கிறார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. உறவினர் வகையில் பிரச்னை, முயற்சிகளில் தடைகளை உருவாக்கலாம். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும்.
கேது இதுவரை உங்கள் ராசிக்கு 3ம் இடமான விருச்சிக ராசியில் இருந்து பல நன்மைகளை தந்து கொண்டிருந்தார். அவர் இறையருளையும், பொருளாதார வளத்தையும் தந்து கொண்டிருந்தார். காரியங்களில் வெற்றி, பொருளாதார வளம் ஏற்பட்டிருக்கும். கேது இடம் மாறி 2ம் இடமான துலாம் ராசிக்கு வருகிறார். இது சிறப்பான இடம் அல்ல. இனி அவரால் நன்மை தர இயலாது. அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்காது. பொருட்கள் திருட்டு போகவும் வாய்ப்பு உண்டு. கேது சாதகமற்ற இடத்தில் இருக்கிறார் என்று கவலை கொள்ள தேவை இல்லை காரணம் அவரது பின்னோக்கிய 4ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 11ம் இடமான கடகத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதன்மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இனி விரிவான பலனை காணலாம்.

பொதுபலன்: ராகுவால் சிறுதடைகள் வரலாம். அதே நேரம் குருவால் இவைகளை ஈடுகட்டும் வகையில் துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். நீண்ட நாளாக தடைபட்ட திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். 2023 மார்ச் 29 க்கு பிறகு சனிபகவானால் ஆற்றல் மேம்படும். எடுத்த காரியம் வெற்றி பெறும். ஆடம்பர நாட்டத்தால் வசதிகள் பெருகும். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர்.
தொழில்: வியாபாரத்தில் நம்பிக்கையுள்ள நண்பர்கள், பெரியோர்கள் ஆலோசனையுடன் முன்னேற்றம் காணலாம். அலைச்சல் அதிகரிக்கும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு. செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். அச்சகம், பத்திரிகை, பப்ளிகேசன், கட்டுமான ஆலோசகர் போன்ற தொழில்கள் வளர்ச்சி அடையும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் பெறும். பங்கு வர்த்தகம் ஆதாயம் தரும். தங்கம், வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தைப் பெறுவர். 2023 மார்ச் 29க்கு பிறகு பண வரவு கூடும். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும். தரகு, கமிஷன் தொழிலில் ஏற்பட்ட அவப்பெயர், செல்வாக்கு பாதிப்பு, வீண் மனக்கவலை முதலியன மறையும்.
பணியாளர்கள்:
அரசுஊழியர்கள் வேலையில் கவனமாக இருக்கவும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல நேரலாம். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. நெருப்பு. மின்சாரம் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். 2023 மார்ச் 29க்கு பிறகு வக்கீல்களுக்கு சிறப்பாக இருக்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
கலைஞர்கள்: சக கலைஞர்களின் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். புதிய ஒப்பந்தங்களைப் பெற சற்று பாடுபட வேண்டியிருக்கும்.
அரசியல்வாதிகள்: தொண்டர்களின் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். தலைமையின் ஆதரவைப் பெறுவதில் இழுபறி நிலை நீடிக்கும்.
மாணவர்கள்: ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்று முன்னேறுவர். ஊக்கத்தொகை, காலர்ஷிப் போன்றவை கிடைக்கும். 2023 ஏப். 22 க்கு பிறகு சிலர் மனச்சோர்வுக்கு ஆளாகலாம்.
விவசாயிகள்: அதிகமாக உழைப்பு தேவைப்படும். மஞ்சள், பயறு வகைகள், பழவகைகள் மூலம் நல்ல வருமானம் காணலாம். வழக்கு விவகாரங்களில் சுமாரான முடிவு கிடைக்கும். 2023 மார்ச் 29க்கு பிறகு கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
பெண்கள்: பெண்களுக்கு சகோதரிகளால் பணஉதவி கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரும். திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு திருமணம் கைகூடும் அதுவும் நல்ல வரனாக அமையும். 2023 மார்ச் 29க்கு பிறகு குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்து போவது நல்லது. இல்லையென்றால் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள்.
உடல் நலம்: கண்தொடர்பான உபாதைகள் வரலாம். மருத்துவச் செலவு ஏற்படலாம்.
பரிகாரம்: சனிக்கிழமை சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். நாக தேவதையை வணங்கி வாருங்கள். ராகுவுக்கு நீல நிற வஸ்திரத்தை சாத்தி அர்ச்சனை செய்யுங்கள். ஏழைகளுக்கு உளுந்து தானம் செய்யுங்கள்.

அஸ்தம்: விடாமுயற்சி தேவை

ராகு 9ம் இடமான ரிஷப ராசியில் இருந்து காரியத் தடங்கலை ஏற்படுத்தி வந்தார். எதிரிகளால் இடையூறு ஏற்பட்டிருக்கலாம். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பீர்கள். இப்போது ராகு 8ம் இடமான மேஷத்திற்கு செல்கிறார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. உறவினர் வகையில் பிரச்னை, முயற்சிகளில் தடைகளை உருவாக்கலாம். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும்.
கேது இதுவரை உங்கள் ராசிக்கு 3ம் இடமான விருச்சிக ராசியில் இருந்து பல நன்மைகளை தந்து கொண்டிருந்தார். அவர் இறையருளையும், பொருளாதார வளத்தையும் தந்து கொண்டிருந்தார். காரியங்களில் வெற்றி, பொருளாதார வளம் ஏற்பட்டிருக்கும். கேது இடம் மாறி 2ம் இடமான துலாம் ராசிக்கு வருகிறார். இது சிறப்பான இடம் அல்ல. இனி அவரால் நன்மை தர இயலாது. அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்காது. பொருட்கள் திருட்டு போகவும் வாய்ப்பு உண்டு. விடாமுயற்சி தேவைப்படும். கேது சாதகமற்ற இடத்தில் இருக்கிறார் என்று கவலை கொள்ள தேவை இல்லை காரணம் அவரது பின்னோக்கிய 4ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 11ம் இடமான கடகத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதன்மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இனி விரிவான பலனை காணலாம்.
பொது பலன்:
வெளியில் பலவேறு விஷயங்களில் பெருமையாக பேசப்பட்டாலும் வீட்டில் விட்டுக்கொடுத்து போவது நல்லது. இல்லையென்றால் வீண்மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். 2023 ஏப்.22 வரை குரு நற்பலனை தருவார். இதனால் பொருளாதார வளத்தை அதிகரிக்கச் செய்வார். குடும்பத்தில் குதுாகலத்தை கொடுப்பார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்கச் செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன், மனைவி இடையே அன்பு பெருகும்.

தொழில்: அனுபவசாலிகள், பெரியோர்களின் ஆலோசனையுடன் தொழிலில் முன்னேற்றம் காணலாம். வெளியூர் பயணம் மூலம் ஆதாயபலன் கிடைக்கும். அச்சகம், பத்திரிகை, பப்ளிகேஷன், கட்டுமானப்பணி போன்ற தொழில்கள் வளர்ச்சி அடையும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை என்றாலும் குருவின் பலம் ஓரளவு துணை நிற்கும். 2023 மார்ச் 29க்கு பிறகு மறைமுகப் போட்டி மறையும்.

பணியாளர்கள்: பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். 2023 ஏப்.22 க்கு பிறகு சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். அரசு ஊழியர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும். நெருப்பு, மின்சாரம் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

கலைஞர்கள்: புகழ், பாராட்டு கிடைக்கப் பெறுவர். தொழில் விஷயமாக அடிக்கடி வெளியூர் செல்ல நேரிடும்.
அரசியல்வாதிகள்: தொண்டர்கள் வகையில் பணம் செலவாகும். பதவியை எதிர்பாராமல் பாடுபட வேண்டியதிருக்கும்.
மாணவர்கள்: விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கப் பெறுவர். ஆசிரியர்களின் அறிவுரை பயன் உள்ளதாக இருக்கும். தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். 2023 ஏப்.22 க்கு பிறகு சிரத்தை எடுத்து படித்தால் தான் பலன் கிடைக்கும். ஆசிரியர்களின் ஆலோனையை பின்பற்றுவது அவசியம்.
விவசாயிகள்: அதிகமாக உழைக்க வேண்டும். வழக்கு, விவகாரங்களில் முடிவு சுமாராக இருக்கும். புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம். 2023 மார்ச் 29க்கு பிறகு கிழங்கு வகைகள், நிலக்கடலை, மற்றும் கரும்பு, எள், உளுந்து, கொள்ளு கேழ்வரகு,காய்கறி வகைகள் போன்றவை மூலம் வருமானத்தைக் காணலாம். புதிய சொத்து வாங்க அனுகூலம் உண்டு. கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். பக்கத்து நிலகாரர்கள் வகையில் இருந்த தொல்லைகள் மறையும்.
பெண்கள்: குடும்பத்தில் உங்களின் அணுகுமுறை பயனுள்ளதாக அமையும். தோழிகளால் உதவி கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். புதிய பதவி தேடி வரும். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானம் காண்பர். 2023 ஏப்.22க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பணிச்சுமை, அலைச்சல் அதிகரிக்கும். சிலர் இடமாற்றத்தை சந்திக்கலாம்.
உடல் நலம்: சிறுசிறு உபாதைகள் வரலாம். மருத்துவச் செலவும் அவ்வப்போது ஏற்படும்.
பரிகாரம்: ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள் ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். 2023 ஏப். 22க்கு பிறகு வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு வில்வம் சாத்தி வழிபடுங்கள்.

சித்திரை 1,2-ம் பாதம்: உறவினரால் பிரச்னை

ராகு 9-ம் இடமான ரிஷப ராசியில் இருந்து காரியத் தடங்கலை ஏற்படுத்தி வந்தார். எதிரிகளால் இடையூறு ஏற்பட்டிருக்கலாம். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பீர்கள். இப்போது ராகு 8ம் இடமான மேஷத்திற்கு செல்கிறார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. உறவினர் வகையில் பிரச்னை, முயற்சிகளில் தடைகளையும் உருவாக்கலாம். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும்.
கேது இதுவரை உங்கள் ராசிக்கு 3ம் இடமான விருச்சிக ராசியில் இருந்து பல நன்மைகளை தந்து கொண்டிருந்தார். அவர் இறையருளையும், பொருளாதார வளத்தையும் தந்து கொண்டிருந்தார். காரியங்களில் வெற்றி, பொருளாதார வளம் ஏற்பட்டிருக்கும். கேது இடம் மாறி 2ம் இடமான துலாம் ராசிக்கு வருகிறார். இது சிறப்பான இடம் அல்ல. இனி அவரால் நன்மை தர இயலாது. அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்காது. பொருட்கள் திருட்டு போகவும் வாய்ப்பு உண்டு. கேது சாதகமற்ற இடத்தில் இருக்கிறார் என்று கவலை கொள்ள தேவை இல்லை காரணம் அவரது பின்னோக்கிய 4ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 11ம் இடமான கடகத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதன்மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இனி விரிவான பலனை காணலாம்.
பொது பலன்:
பணிகளில் அவ்வப்போது தடங்கல்கள் வந்தாலும் சாமர்த்தியமாக முறியடிப்பீர்கள். அனாவசியமாக எதிலும் மூக்கை நுழைக்காமல் இருக்கவும். குருவால் நன்மை கிடைக்கப் பெறுவீர்கள். பணப்புழக்கம் சீராக இருக்கும். மதிப்பு, மரியாதை கூடும். 2023 ஏப்.22க்கு பிறகு குரு சாதகமற்ற இடத்திகு சென்றாலும் கவலைப்படத் தேவை இல்லை காரணம் சனி பகவான் சாதகமான இடத்திற்கு வந்து நற்பலன்களைத் தருவார்.
குருவால் குடும்பத்தில் குதுாகலம் உண்டாகும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். கணவன், மனைவி இடையே அன்பு, பாசம் மேலோங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். 2023 ஏப்.22க்கு பிறகு கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு வரலாம். இதனால் சிலர் குடும்பத்தை விட்டு தற்காலிகமாக பிரியும் நிலை கூட உருவாகலாம். வீண் வாக்கு வாதத்தை தவிர்க்கவும்.
தொழில்: கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும். பணப்புழக்கம் சீராக இருக்கும். எதிலும் பணத்தை முதலீடு செய்வதை விட அறிவை பயன்படுத்தி வருவாய் தேடவேண்டும். சிலர் தொழில் நிமித்தமாக இருப்பிடத்தை வேறு இடத்துக்கு மாற்ற நேரலாம். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். குருவின் பார்வைகளால் கூட்டாளிகள் இடையே ஒற்றுமை ஏற்படும்.2023 மார்ச் 29க்கு பிறகு பகைவர் தொல்லை மறையும். புதிய தொழில் முயற்சி அனுகூலத்தைக் கொடுக்கும்.
பணியாளர்கள்: வேலையில் பளு இருந்தாலும் அதற்கான நன்மை கிடைக்கும். இடமாற்ற பீதி தொடரும். சிலர் பதவி உயர்வு பெற வாய்ப்புண்டு. உங்களிடம் நிலவிய மந்த நிலை குருவால் மறையும். சுறுசுறுப்பு ஏற்படும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். 2023 ஏப். 22க்கு பிறகு இடமாற்றம் ஏற்படலாம். முயற்சி செய்தால் மட்டுமே கோரிக்கைகள் நிறைவேறும். வழக்கமான சம்பள உயர்வு, சலுகைகள் கிடைப்பதில் தடையிருக்காது.
கலைஞர்கள்: சிறப்பான பலன்களை காண்பர். வருமானத்திற்கு குறைவிருக்காது.
அரசியல்வாதிகள்: எதிர்பார்த்த பதவியை பெறலாம். ஆனால் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும்.
மாணவர்கள்: போட்டி பந்தயங்களில் வெற்றி காண்பர். ஆசிரியர்கள் ஆலோனையை பின்பற்றினால் முன்னேற்றம் கிடைக்கும்.
விவசாயிகள்: அதிக உழைப்பு தேவைப்படும். பணப்பயிர்களில் முதலீடு செய்ய வேண்டாம்.
பெண்கள்: மனதில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் வகையில் இருந்த பிரச்னை மறையும். அவர்களால் பெருமை கிடைக்கும். 2023 மார்ச் 29க்கு பிறகு வீட்டினுள் பிரச்னை வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். உடல் நலம்: சீராக இருக்கும். மருத்துவச் செலவு பெருமளவு குறையும்.
பரிகாரம்: நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். பாம்பு புற்றுள்ள கோவிலுக்கு சென்று வாருங்கள். ராகு காலத்தில் பைரவருக்கு தயிர் சாதம் படைத்து வழிபடலாம். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு வில்வ மாலை சாத்தி வணங்குங்கள்.

Advertisement
Advertisement
 
Advertisement