Advertisement

நீர்நிலை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

ஆவடி:ஆவடி, நந்தவனமேட்டூர் அருகே, விளிஞ்சியம்பாக்கம் ஏரிக்கரை புறம்போக்கில் உள்ள, 293 ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்ற, தேசிய பசுமை தீர்ப்பாயம், ஓராண்டுக்கு முன் உத்தரவிட்டது.

ஆனால், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், உத்தரவை செயல்படுத்தவில்லை. அதையடுத்து, தீர்ப்பாயத்தின் கண்டனத்திற்கு ஆளானது.

இந்நிலையில், நீர்வளத்துறை மற்றும் ஆவடி வருவாய் துறை அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன், நேற்று காலை சென்று, அங்குள்ள 15 ஆக்கிரமிப்பு கடைகளை இடித்து அகற்றினர். இந்த நடவடிக்கைக்கு, அங்கு வசிக்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், சலசலப்பு ஏற்பட்டது.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement