Advertisement

துயரப்பாக்கமாக மாறிய துரைப்பாக்கம்..சுரங்கத்தில் மாட்டிக் கொண்ட சில்க்யாரா தொழிலாளர்களுக்கு கூட இரும்புக் குழாய் மூலமாக வேண்டிய உணவு,குடிநீர் கிடைத்தது

ஆனால் மிக்ஜாம் புயல் வாரி்க் கொட்டிய மழை நீரில் மாட்டிக்கொண்ட சென்னை வேளாச்சேரி,மடிப்பாக்கம்,துரைப்பாக்கம் மக்களுக்கு அதுகூட கிடைக்கவில்லை.

அதிலும் துரைப்பாக்கம் இன்னும் மோசம்.எல்லா இடங்களிலும் தண்ணீர் வடிந்துவருமு் நிலையில் இங்கே மட்டும் தண்ணீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

இன்று காலை அங்கே போயிருந்த போது மீட்பு படகுகள் பற்றாக்குறை காரணமாக சிலர் தங்கள் வீட்டு வாசலில் போட்டிருந்த தகர கூரையையே படகு போலாக்கி அதில் ஏறி தப்பிவந்தனர்.

பயத்தாலோ அல்லது பசியாலோ விடாமல் ஒரு மூலையில் பதுங்கிக்கிடந்த குட்டி நாய் ஒன்று விடாமல் குரைத்துக் கொண்டிருந்தது.தன்னார்வலர் ஒருவர் அதுவும் ஒரு உயிர்தானே என்ற உயரிய நோக்கோடு அதனை காப்பாற்றிக் கரைக்கு கொண்டு வந்து சேர்த்தார் பின் அங்கு இருப்பவர்கள் அந்த நாய் குட்டிக்கு பிஸ்கட்,பால் போன்றவைகளை கொடுக்க அந்த குட்டி நாய் அதை சீந்தவே இல்லை மீண்டும் அந்த தண்ணீர்ப்பக்கமே போக முயற்சித்து அலைமோதியது பிறகுதான் தெரிந்தது அதன் தாய் நாய் அந்தப்பக்கம்தான் எங்கோயோ இருக்கிறது என்பது அது இருககிறதா? என்பதே தெரியாமல் சுற்றி சுற்றி வந்த அந்த குட்டி நாயின் பாசம் நெஞ்சை பிசைநதது.

ஏரிக்குள் வீடு கட்டினால் இந்த நிலைதான் என்று எளிதாக சொல்லிவிடலாம்தான் ஆனால் நுாற்றுக்கு தொன்னுாறு சதவீதம் வீடுகள் வீணாய்ப் போன அல்லது வீணடிக்கப்பட்ட ஏரிகளில்தானே கட்டப்பட்டிருக்கிறது.

மேலும் ஏற்கனவே நொந்து போயுள்ளவர்களை இந்த நேரம் கேலி பேசி மேலும் நோக வைக்கக்கூடாது.முதலில் அவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முன்வரவேண்டும்.

வீட்டைச்சுற்றி தண்ணீர் இருந்தாலும் பாத்ரூம் போவதற்கு கூட வீட்டில் தண்ணீர் இல்லை என்பதுதான் வேதனை மற்றும் வேடிக்கை இதற்கு காரணம் மின்சாரம் இல்லாததால் மோட்டார் போட்டு வீட்டிற்கு தேவையான தண்ணீரை ஒவர்ஹெட் டேங்க்கில் ஏற்ற முடியாத சூழ்நிலை.

வீட்டைவிட்டு வெளியே வருபவர்கள் பலரிடம் பணம் இருக்காது மேலும் அவர்களில் பலருக்கு அடைக்கலம் தருவதற்கு உறவினர்களோ,நண்பர்களோ இருக்கமாட்டார்கள் இவர்களைப் போன்றவர்களுக்கு அரசாங்கத்தின் அன்பும் ஆதரவும் உடனடியாக தேவை

-எல்.முருகராஜ்

Advertisement
 

Home வாசகர் கருத்து (4)

 • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

  துயரத்திலும் மகிழிச்சியா வெள்ளத்தில் வள்ளத்தில் போவது மாதிரி தெரிகிறது அந்த பெண்கள். இடுக்கண் வருங்கால நகுக என்று வள்ளுவன் சொன்னதிருக்கு ஏற்றார் போல்.

 • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

  இயற்கையிடம் இறைஞ்சுவதை தவிர வேறொன்றும் தோன்றவில்லை , இவர்கள் முட்டிமோதும் தூதர்களும் , கடவுளர்கழும் இப்போ எங்கே உள்ளார்கள் ?

  • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

   இந்த சீரழிவுக்கு காரணம் ஆட்சகியாளர்களிடம் உண்மையான கடவுள் நம்பிக்கையும் மக்கள்தொண்டும் இல்லாததும் தான் காரணம். இயற்கையை தான் எல்லா மதமும் இறைவன் என்று நம்புகின்றன. மனிதன் செய்யும் எந்த தவறுக்கும் கடவுள் காரணம் இல்லை. ..வருமுன் காக்காததன் தவறு தான் இது...இயற்கை (இறை ) நமக்கு எல்லாவற்றையும் இனிதாக தந்திருக்கிறது.

  • visu - tamilnadu,இந்தியா

   ஒட்டு போடும்போது உங்கள் பகுதி வாசி ஒருவரை நிறுத்தி அவரை தேர்தலில் வெற்றி பெற வைக்க மக்களுக்கு துப்பில்லை கட்சி அடிப்படையில் ஓட்டை போட்டு அவர் பின் ஓடி கொண்டிருக்கிறார்கள்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement