Advertisement

பூண்டி உபநீர் வெளியேற்றம் 1,485 கன அடியாக குறைவு



நா.உதயகுமார் / திருவாலங்காடு/8056651822/ நேரம்/ கீ.

பூண்டி, பள்ளிப்பட்டு, திருத்தணி, பட்டரைபெரும்புதுார் வழியாக வரும் கொசஸ்தலை ஆற்றில், கடந்த இரண்டு நாட்களாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பூண்டி நீர்த்தேக்கத்தின் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்தும், அதிகளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதையடுத்து, நேற்று முன்தினம் 45,000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில், நேற்று காலை, 17, 605 கன அடியாக குறைக்கப்பட்டது.

நேற்று காலை வினாடிக்கு 11,050 ஆக இருந்த நீர்வரத்து, மதியம் 2, 890 ஆக வந்து கொண்டு இருக்கிறது. இதையடுத்து, நீர்த்தேக்கத்தில் இருந்து, திறக்கப்படும் உபரி நீர், 1,485 ஆக கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. நீர்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான, 3.2 டி.எம்.சி.,யில், தற்போது 2.8 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement