Advertisement

வெள்ளக்காடானது கொளத்தூர்,


நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் கொளத்துார், வெள்ளக்காடானது. புதிதாக போடப்பட்ட மழைநீர் கால்வாய்களே வெள்ளத்தில் மூழ்கின. பின் அதிகாலை 3:00 மணியளவில் வெள்ளம் வடிந்தது.

கொளத்துார், சக்திவிநாயகர் கோவில் தெரு மற்றும் பாலாஜி நகர் சந்திப்பில், 50 மீட்டர் இடைவெளியில் உள்ள மழைநீர் கால்வாயில் கூட, மோட்டார் மூலமே தண்ணீரை அகற்றினர்.

மழைநீர் வடிந்த பின், பாதாள சாக்கடையில் இருந்து சாலையில் சாக்கடை நீர் வெளிவரத் துவங்கியது. மழைநீர் வடிகால்வாயிலும் இந்த அவலம் உள்ளது. மழைநீர் கால்வாய் செல்லும் அமைப்பை முறையாக அமைக்காமல் போனதே பாதிப்புக்கு முக்கிய காரணம்.

- - வேணுகோபால்,

சமூக ஆர்வலர், கொளத்துார்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement