Advertisement

கணவன் கொலை:மனைவி கைது

வளசரவாக்கம் :கணவனை கொலை செய்து ஒன்றும் தெரியாதது போல் நாடகமாடிய மனைவியை, போலீசார் கைது செய்தனர்.சென்னை, வளசரவாக்கம் கைக்கான் குப்பம், வ.உ.சி., தெருவைச் சேர்ந்தவர் குமார், 50; இவரது மனைவி விஜயா, 36. குமார் தினமும் மது அருந்தி மனைவியிடம் தகராறு செய்து வந்துஉள்ளார்.இந்நிலையில் 3ம் தேதி மதியம், குமார் மது அருந்தி வீட்டுக்கு வந்த போது, திடீரென மயக்கமடைந்து இறந்துவிட்டதாக, அவரது மனைவி விஜயா, போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, வளசரவாக்கம் போலீசார் குமாரின் உடலை மீட்டு, அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில், குமாரின் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது.இதையடுத்து, குமாரின் மனைவியிடம் போலீசார் விசாரித்தனர். குமார், மது அருந்தி தன்னை மிகவும் கொடுமைப்படுத்தியதாகவும், சம்பவத்தன்றும் அவர் தன்னை தாக்கியதால், அவரை தள்ளிவிட்டதில் இறந்ததாகவும், விஜயா தெரிவித்தார். இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், கணவனை கொன்று ஒன்றும் தெரியாதது போல் நாடகமாடிய விஜயாவை கைது செய்தனர்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement