Advertisement

தீயணைப்பு துறை போட்டிவீரர்கள் உற்சாக பங்கேற்பு

சென்னை, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வீரர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று துவங்கின. இதில், துறை வீரர்கள் உற்சாகமாக பங்கெடுத்து அசத்தி வருகின்றனர்.சென்னை, ராஜரத்தினம் மைதானத்தில், தமிழ்நாடு தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணிகள் துறை வீரர்களுக்கு, விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. மூன்று நாட்கள் நடக்கும் போட்டியை, தீயணைப்பு துறை கூடுதல் இயக்குனர் விஜயசேகர் நேற்று துவக்கி வைத்தார்.பின் அவர் பேசியதாவது:ஆண்டுதோறும் தமிழ்நாடு தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், தடகளம், கூடைப்பந்து, வாலிபால், நீச்சல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்படவில்லை.தமிழ்நாடு தீயணைப்பு துறையில் மிகச்சிறந்த விளையாட்டு வீரர்கள் உள்ளனர். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், மாநில அளவிலான வாலிபால் வீரர்களுக்கு பயிற்சியாளராக, நம் தீயணைப்பு துறையைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றனர்.சிறந்த வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக, விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.மண்டல அளவிலான போட்டிகளுக்கு தற்போது வழங்கப்படும் தொகை மிகக்குறைவாக உள்ளதால், அவற்றை உயர்த்தி தரக்கோரி அரசிடம் கோரிக்கை வைத்துஉள்ளோம்.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், வடக்கு மண்டல இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன், மத்திய சென்னை மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் சரவணன், வடசென்னை மாவட்ட தீயணைப்பு அலுவலர் லோகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement