Advertisement

பன்னீர் யோசித்துநல்ல முடிவு எடுக்க வேண்டும்!


அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலருமான ஆர்.பி.உதயகுமார்:

ஜெயலலிதா மறைவுக்கு பின், அவரை போலவே திறமையாக, பல பிரச்னைகளை பழனிசாமி கையாண்டார். இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த அவர், தன்னை நம்பியவர்களை கைவிடவில்லை. கட்சி, ஆட்சி என, எல்லா சுமைகளையும் தாங்க முன்வந்தார். ஆனால், பன்னீர்செல்வம் அப்படியில்லை. ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்ட கால கட்டம் வேறு; இன்றைய சூழல் வேறு. 30 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தை ஆண்ட கட்சியின் தலைவராக இருக்கும் பன்னீர்செல்வம், தீர்க்கமாகவும், விரைவாகவும் முடிவெடுக்க வேண்டும். ஆனால், அப்படி எடுப்பதில்லை. எந்த ஒரு விஷயத்திலும் உறுதியான முடிவு எடுக்க, ஒற்றை தலைமையால் தான் முடியும். முடிவெடுக்கும் அதிகாரம் ஒருவர் கையில் தான் இருக்க வேண்டும். எல்லா விஷயத்திற்கும், இரண்டு பேர் கையெழுத்து போட வேண்டும். இருவரிடமும் ஆலோசனை செய்ய வேண்டும் என்ற நிலையில் தான், அ.தி.மு.க., முடங்கியது. இதை நான்கரை ஆண்டுகளாக, நானே கண் கூடாக பார்த்திருக்கிறேன்.பன்னீர்செல்வத்திடம் பேச்சு நடத்த, நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால், ஏதோ ஒரு சக்தி அதற்கு தடையாக இருக்கிறது. அந்த சக்தி தனிநபராகவோ, கட்சி தலைவர்களாகவோ இருக்கலாம்.ஜெயலலிதா மறைந்த உடன், பன்னீர்செல்வத்தை முதல்வராக்க முடிவு எடுத்த போது, நாங்கள் யாரும் எதிர்க்கவில்லை. அதன்பின், சசிகலா முதல்வராக நினைத்த போதும், நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், 'தர்மயுத்தம்' என்று ஒன்றை துவங்கி, முதன்முறையாக பஞ்சாயத்து இழுத்தது பன்னீர்செல்வம் தான். பன்னீர்செல்வம் தன் அதிகாரத்துக்கோ, பதவிக்கோ, செல்வாக்குக்கோ பின்னடைவு என்று நினைத்தால், உடனே 'அமைதி' யுத்தத்தை துவங்குவார். அதேநேரத்தில், தி.மு.க.,வை எதிர்க்கும் நிலை வரும் போதெல்லாம் பின்வாங்குகிறார். ஆனால், தி.மு.க., எதிர்ப்பில், பழனிசாமி உறுதியாக இருக்கிறார். இதுதானே, அ.தி.மு.க.,வின் அடிப்படை. இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்பிருப்பதாக, பன்னீர் தரப்பு கூறுகிறது. அதுதான், எங்கள் கொந்தளிப்புக்கு காரணமே. ஏற்கனவே சின்னத்தை முடக்கிய கசப்பான அனுபவம் இருக்கும் நிலையில், இதுபோன்று பேசுவது நல்லதல்ல. இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. பெரும்பான்மை நிர்வாகிகளின் கருத்தை பரிசீலனை செய்வதாக பன்னீர் கூறினால், கட்சியில் அவருக்குரிய மதிப்பு, மரியாதை கிடைக்கும். வரும், 11ம் தேதி வரை அவகாசம் இருக்கிறது. நன்றாக யோசித்து நல்ல முடிவை எடுக்கட்டும்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (8)

 • Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ

  இப்படித்தான் இருக்க போகுறீர்களா.

 • John Miller - Hamilton,பெர்முடா

  தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை, வருமான வரித்துறை, அமலாக்க துறை, போன்றவற்றின் கண்களுக்கு கொள்ளை அடித்து குவித்து வைத்து இருக்கும் உதயகுமார், காமராஜ், தற்கொலை செய்த சீரியல் நடிகை புகழ் கோவில்பட்டி ராஜு, ஜெயக்குமார், முதலியோர் தெரிய மாட்டார்களா?

 • Balasubramanyan - Chennai,இந்தியா

  ஏன் இடப்படியிடம் விட்டுக்கொடுக்க சொல்லக்கூடாத .எப்பவும் Panneerselvan விட்டுக்கொடுக்குமஆ .முன்மந்திரியாக எடப்பாடி பொதுச்செயலராக பன்னீர்.

 • raja - Cotonou,பெனின்

  வேண்டாம் இந்த பன்னீர் தூக்கி எறியுங்கள் அதிமுகாவை விட்டு தொண்டர்களும் தமிழக மக்களும் எடப்பாடியார் பின்னால் தான்.....

 • Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா

  இது வரை நடந்தது அவர் யோசனை தான். 3 எம் எல் எ வைத்துக்கொண்டு உச்ச பதவிக்கு போட்டியிட மல்லுக்கட்ட ஆசைப்பட கூடாது. நல்ல பதவி வாங்கிக்கொண்டிருக்கலாம். செய்ய மாட்டார்.

 • ravi - chennai,இந்தியா

  தலைகீழே நின்னு தண்ணி குடிச்சாலும் எடப்பாடி பொதுச்செயலாளராக முடியாது. கொள்ளையடித்த பணத்தில் மீண்டும் மீண்டும் பொதுக்குழுவை நடத்துவதால் அஞ்சுப்பைசா லாபம் இருக்காது. சட்டமும் தெரியவில்லை. ஒரு இங்கிதமும் தெரியவில்லை.

 • ravi - chennai,இந்தியா

  அதிமுகவினர் ஒருத்தனுக்கு அறிவே இல்லையா. எப்படி ஒருத்தரை இத்தனை பேர் சமயத்தில் இழிவு செய்கிறார்கள்.

 • மணி - புதுகை,இந்தியா

  சில்லரையெல்லாம் சேர்ந்து மூட்டையானாலும் செலவுக்கு என்னவோ பஞ்சம்தான்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement