Advertisement

தொழில் முனைவோராக மாற விருப்பமா?

நாடு முழுதும் தொழில்முனைவோரை உருவாக்க, மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வரும் திட்டம் பற்றி விவரிக்கும், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை இயக்குனர் எஸ்.நடராஜன்:

பிரதமரின் உணவு பதப்படுத்துதல் மற்றும் சிறு, குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டமானது, விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை மதிப்பு கூட்டிய பொருட்களாக மாற்றி, விற்பனை செய்வதற்கான வாய்ப்பை உருவாக்கி தருகிறது. இதன் வாயிலாக, விவசாயிகள் அதிக வருமானம் ஈட்ட முடியும்.
மேலும், தொழில் முனைவோராக மாற விரும்புவோருக்கு, நிதி உதவி மற்றும் வழிகாட்டுதல் வழங்குவதே, இந்த திட்டத்தின் நோக்கம். இந்த திட்டத்தை நாடு முழுதும் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், உணவு பதப்படுத்துதல் துறை சார்ந்த தொழில்களை முன்னெடுக்க தமிழகத்துக்கு, 503 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வேளாண் உற்பத்தியாளர் கூட்டமைப்புகள், சுய உதவி குழுக்கள், வேளாண் கூட்டுறவு மையங்கள் போன்றவை, இந்தக் கடனை வாங்கலாம்.இந்த திட்டத்தின் கீழ் மானியத்தில் கடன் வழங்குவது மட்டுமின்றி, தொழில் முனைவுக்கான வழிகாட்டுதலையும், எங்களின் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை வழங்கும். சிறு, குறு தொழில்கள் மற்றும் குடிசை தொழில்களில் ஈடுபட்டு உள்ளவர்களும், இத்திட்டத்தில் பயன் அடையலாம்.
அப்பளம், வடகம், ஊறுகாய் உள்ளிட்ட உணவு பொருட்களை தயார் செய்பவர்களுக்கும், இத்தகைய தொழில்களை புதிதாக துவங்க நினைப்போருக்கும் உதவிகள் வழங்கப்படும். மேலும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட் களை சந்தைப்படுத்துவதற்கும் வழிகாட்டப்படும். இதனால், கடன் வாங்கியவர்கள் சில ஆண்டுகளிலேயே கடனை திருப்பி செலுத்திட முடியும்.
இதன் மற்றொரு முக்கிய நோக்கம், முறைசாரா தொழில்களை முறைப்படுத்தப்பட்ட தொழில்களாக மாற்றுவதாகும். இந்த திட்டத்தின் இலக்கை எட்டுவதற்காகவும், ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக பயன்படுத்தவும், விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
வேளாண் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான புத்தாக்கப் பயிற்சி மற்றும் உணவு பதப் படுத்து தல் தொழில்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டங்களை தொடர்ந்து மண்டலங்கள் வாரியாக, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மேற்கொண்டு வருகிறது. இத் திட்டத்தின் கீழ் பலன் பெற விரும்புவோர், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறையை தொடர்பு கொள்ளலாம்.
தொடர்புக்கு: 99406 2839890477 41230

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement