Advertisement

மாணவர்களே'கூல் லிப்'வேண்டாமே!

பள்ளி, கல்லுாரிகளில் புதிதாக புழக்கத்தில் வந்துள்ள போதை புகையிலையின் கொடூரத்தை விவரிக்கிறார் முனைவர் சுடர்க்கொடி கண்ணன்:

'போதைப் பொருட்கள் மனிதனை மீண்டும் குரங்காக்கும். அவனுக்கு அக்கா தெரியாது; தங்கை தெரியாது; அம்மா தெரியாது.பல்லாண்டுகளாகப் பெற்ற பரிணாம வளர்ச்சி மறைந்து, மீண்டும் கற்காலத்துக்குப் போய்விடுவோம்' என்ற சமீபத்திய விக்ரம் பட வசனம் உண்மையாகி விடுமோ என எண்ணும் அளவுக்கு, இன்றைய இளைய தலைமுறையினர் போதையின் பிடியில் சிக்கியுள்ளனர்.
அதிலும் குறிப்பாக, தற்போது பள்ளி, கல்லுாரி வகுப்பறைகளில் சிறிய காலி பாக்கெட்டுகள் அதிக அளவில் காணப்படுகின்றன என்றும், வகுப்பறைகளை சுத்தம் செய்யும் போது இவற்றைக் காணும் ஆசிரியர்களுக்கு அவை என்னவென்றே தெரியவில்லை.'கூல் லிப்' எனப்படும் புது வகை போதைப் பொருளான இவை, ஏற்கனவே புழக்கத்தில் இருந்தாலும், தற்போது பள்ளி, கல்லுாரி மாணவர்களை குறி வைத்து அதிகமாக விற்கப்படுகின்றன.
கூல் லிப் என்பது, பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் போதை தரும் புகையிலை. இதை உதட்டில் அல்லது நாக்கின் அடியில் வைத்துக் கொண்டால், சில வினாடிகளில் போதை உண்டாகி, அரை மயக்க நிலையில் கண்கள் செருகி, மந்த நிலை ஏற்படும்.இவை, மிகக் குறைந்த விலையில் கிடைப்பதால், மாணவர்களால் அதிகம் வாங்கப்படுகிறது. சிகரெட்டில் சேர்க்கப்பட்டிருக்கும் அளவை விட, இதில் அதிக அளவில், 'நிக்கோடின்' சேர்க்கப்பட்டு இருக்கிறது.இதுவே, கூல் லிப் போதைக்கு மாணவர்களை அடிமைப்படுத்துகிறது.

இதை பயன்படுத்துவது எளிதாக இருப்பதால், மாணவர்கள் வீட்டிலும் வகுப்பறையிலும் கூட நாக்குக்கு அடியில் வைத்து, சுவைக்கின்றனர்.கூல் லிப் தயாரிக்கப் பயன்படுத்தும் பொருட்கள் மிகவும் நச்சுத்தன்மை உடையதாகவும், புற்றுநோயை உண்டாக்குபவையாகவும் உள்ளன. இவை, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை குறைத்து, மூச்சுத் திணறலை ஏற்படுத்தி, கடுமையாகப் பாதிக்கக்கூடிய, 'கார்பன் மோனாக்சைடு' நச்சுத்தன்மையை ஏற்படுத்துகின்றன.
நம் மூளையில் சுரக்கும், 'டோபமைன்' என்ற ஒரு 'ஹார்மோன்' எப்போதும் சுரந்து கொண்டிருப்பதில்லை. நாம் ஓர் இசைக் கேட்டுக் கொண்டிருக்கும்போதோ அல்லது ஏதோ ஒரு பரவச நிலையில் இருக்கும்போதோ, நம் மூளையில் மகிழ்ச்சியை தரும் டோபமைன் ஹார்மோன் சுரக்கிறது.இந்த டோபமைன் ஹார்மோன் சிறிது நேரம் மட்டுமே சுரக்கிறது. அந்த நேரம் நமக்குப் பரவசம் ஏற்படுகிறது.
அதுபோல, கூல் லிப் போதைப் பழக்கம் உள்ளவர்களுக்கு அதைப் பயன்படுத்தும்போது அதிகமாக டோபமைன் சுரந்து கொண்டே இருப்பதால், அந்தப் பரவச நிலையைப் பெற வேண்டி, மீண்டும் மீண்டும் உபயோகிக்கத் துாண்டும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.பள்ளிகளில் இருந்து, 100 மீட்டர் சுற்றளவில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யக் கூடாது என்று விதிகள் இருக்கும் நிலையில் கூட, கூல் லிப் போன்ற போதைப் புகையிலை, வகுப்பறை வரை வந்து, மாணவர்களை குறி வைப்பது தான் கவலை தரக்கூடிய விஷயம்!

Advertisement
 

Home வாசகர் கருத்து (6)

 • அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா

  கையாலாகாத அரசு தான் காரணம்.... அரசு தீவிர நடவடிக்கை எடுக்காது.... அரசாங்கமே டாஸ்மாக் மூலம் போதைப் பொருளை விற்பனை செய்யும்போது யாரைச் சொல்வது....

 • pottalam nool - AtheAthe,இந்தியா

  தேவைக்கு அதிகமா உணவு சாப்பிடுவதும் போதை போல கெடுதல் தான் . சிறுநீரகம் கெட்டுபோகும்வரை நிறுத்த முடியாது

 • Vijay - Chennai,இந்தியா

  திராவிட மாடல் ஆட்சியில் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்

 • prakashc - chennai,இந்தியா

  விடியலின் அவலம் ஸ்டாலின் எல்லா வித போதையும் அவன் விற்கிறான் . இவன் குட்கா பத்தி பேசுறான்

 • prakashc - chennai,இந்தியா

  vid

 • ravi - chennai,இந்தியா

  இத்துப்போன கல்விக்கொள்கையால் தான் போதைப்பொருட்கள் நடமாட்டம் பள்ளி, கல்லூரிகளில் அதிகரித்துள்ளன. மாணவர்களை FAIL ஆக்கும் கடுமையான போக்கை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பிரம்படி கொடுக்கலாம் என்று சொல்லவேண்டும். கண்டிப்பு இல்லாமல் ஒழுக்கம் வராது. ஒழுக்கம்கெட்ட அரசியல்வாதிகளால் ஒழுக்கம்கெட்ட கல்விக்கொள்கை தான் இருக்கும். இது மாணவர்களுக்கென்று ஒரு கடமையும் இருக்காது. ஆசிரியர்கள் அவர்கள் ஒன்றும் கேட்கமுடியாது. கேட்டால் அடுத்தநாள் ஆசிரியர்கள் உயிரோடு இருக்கமுடியாது. ரௌடிசம் புள்ளிங்கோக்களால் பள்ளிகளில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. திமுக பன்னாடைகள் இந்துக்களை தாக்குவதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். குரங்கு கிராப் வைத்துக்கொண்டு பள்ளிக்கு வரும் மாணவர்களை தண்டிக்கமாட்டார்கள். மாணவர்களுக்கு கல்வியைவிட ஒழுக்கம் முக்கியம். அறிவில்லாமல் பேசலாம்-முடிக்கும் ஒழுக்கத்திற்கும் என்ன சம்பந்தம் எனலாம். மாணவர்கள் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று வரைமுறை இருக்கிறது.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement