Advertisement

வெங்கையா மகிழ்ச்சி ஏன்?

'சமீபகாலமாக உற்சாகமாக வலம் வருகிறார்; அப்படியானால், இவர் தான் அடுத்த ஜனாதிபதியா...' என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, 72, பற்றி கேட்கின்றனர், டில்லியில் உள்ள அரசியல்வாதிகள்.

பிரதமர் மோடி தலைமையிலான முதல் அமைச்சரவையில் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக பதவி வகித்தார் வெங்கையா நாயுடு.திடீரென பாதியிலேயே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அவர், துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அமைச்சர் பதவியை இழந்தது, அவருக்கு லேசான வருத்தத்தை ஏற்படுத்தியது. ஆனாலும், அதை அவர் வெளிக்காட்டவில்லை. வெங்கையா நாயுடுவின் துணை ஜனாதிபதி பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. மீண்டும் அவருக்கு ஏதாவது பதவி கிடைக்குமா என, பலரும் எதிர்பார்த்த நிலையில், சமீபத்தில் வெங்கையா நாயுடு பேசியது, பரபரப்பை ஏற்படுத்தியது.

'துணை ஜனாதிபதியாக பதவியேற்றபோதே அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விட்டேன். ஆனால், பொது வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறவில்லை...' என மகிழ்ச்சியாக சிரித்தபடியே கூறினார், வெங்கையா நாயுடு. அவரது இந்த பேச்சுக்கு, ஆயிரம் அர்த்தங்கள் இருப்பதாக கூறுகின்றனர், டில்லியில் உள்ள அரசியல்வாதிகள்.

'ஜூலையில் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. இதில், பா.ஜ., சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக வெங்கையா நாயுடுவை நிறுத்துவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் தான், அவரது முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது...' என்கின்றனர், டில்லி அரசியல்வாதிகள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement