Advertisement

ஆவேசப்படும் பா.ஜ.,வினர்!

பதவியில் இருக்க முடியாது! 'பழைய கதையை காரணம் காட்டி, எங்களை பயமுறுத்த முடியாது...' என, பீஹாரைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் மீது, ஆவேசமாக பாய்கின்றனர், அந்த மாநில பா.ஜ.,வினர்.


இம்மாநிலத்தில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. விரைவில், ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. பா.ஜ., கூட்டணியில் அங்கம் வகிப்பதால், ஐக்கிய ஜனதா தளம், தங்கள் கூட்டணிக்குத் தான் ஆதரவு தரும் என்று, பா.ஜ., வினர் நம்புகின்றனர்.ஐக்கிய ஜனதா தளம் கட்சியினரோ, ஏற்கனவே நடந்த சில அரசியல் நிகழ்வுகளை கூறுகின்றனர். கடந்த, 2007ல் ஜனாதிபதி தேர்தல் நடந்த போது, ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணியில் இருந்தது.


ஆனால்,தேர்தலில் காங்., வேட்பாளர் பிரதிபாவை ஆதரித்தது. அந்த தேர்தலில், பிரதிபா வெற்றி பெற்றார்.கடந்த முறை ஜனாதிபதி தேர்தல் நடந்த போது, ஐக்கிய ஜனதா தளம் கட்சி, காங்., கூட்டணியில் இருந்தது. ஆனால் தேர்தலில், பா.ஜ., நிறுத்திய ராம்நாத் கோவிந்த்தை ஆதரித்தது. இதில், ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றார். இந்த கதையை தற்போது கூறும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர்,

'இதன்படி பார்த்தால், தற்போது எதிர்க்கட்சி கூட்டணியின் வேட்பாளரைத் தான் நாங்கள் ஆதரிப்போம். அந்த வேட்பாளர் தான் வெற்றி பெறுவார்...' என்று பா.ஜ.,வினரை கிண்டலடிக்கின்றனர். 'எங்கள் தயவில் தான் நிதிஷ் குமார் முதல்வராக பதவி வகிக்கிறார். தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தினால் பதவியில் இருக்க முடியாது...' என்று ஆவேசப்படுகின்றனர், பா.ஜ., வினர்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement