'இவரும் ஆடம்பர விரும்பி தான்; ஆனால், இப்போது திடீரென அமைதியாகி விட்டார்...' என்று கர்நாடக மாநில காங்., தலைவர் சிவகுமாரை கிண்டலடிக்கின்றனர், அவரது அதிருப்தியாளர்கள். இம்மாநிலத்தில், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமை யிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அடுத்தாண்டு இங்கு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், அனைத்து அரசியல் கட்சிகளும் முழு வீச்சில் அதற்கு தயாராகி வருகின்றன.
எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆட்சியை பிடித்தால், யார் முதல்வர் என்பதில், முன்னாள் முதல்வர் சித்தராமையா, முன்னாள் அமைச்சர் சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதிரடி மற்றும் ஆடம்பர அரசியலுக்கு சொந்தக்காரரான சிவகுமார், திடீரென மென்மையான போக்கை பின்பற்றுகிறார். வழக்கமாக இவரது பிறந்த நாளில் ஆள் உயர மாலை, பல நுாறு கிலோ கேக், பட்டாசு, தெருவெங்கும் விளம்பர பலகைகள் என துாள் பறக்கும்.
இந்தாண்டு பிறந்த நாளில், அவர் மிகவும் அடக்கி வாசித்தார். 'பிறந்த நாளன்று வெளியூர் செல்கிறேன்.யாரும் எனக்காக எந்த ஏற்பாடும் செய்ய வேண்டாம். அப்படி செய்ய நினைத்தால், கட்சி நடத்தும் போராட்டங்களுக்கு, அந்தக் காசை செலவு செய்யுங்கள்...' என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
காங்கிரசில் உள்ள அவரது அதிருப்தியாளர்களோ, 'ஆடம்பரமாக பிறந்த நாள் கொண்டாடினால், மக்களிடையே வெறுப்பு ஏற்படும்; அது, தேர்தலில் எதிரொலிக்கும். எதிர்காலத்தில் முதல்வர் பதவியில் அமர்வதற்கு இடையூறாக இருக்கும் என நினைக்கிறார். அதனால் தான் அடக்கி வாசிக்கிறார்...' என்கின்றனர்.
அடக்கி வாசிப்பது ஏன்?
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!