Advertisement

பா.ஜ.,வில் இணைவோர் எண்ணிக்கை கூடும்!


சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த, தி.மு.க., கொள்கை பரப்பு செயலர், திருச்சி சிவாவின் மகன் சூர்யா: தி.மு.க.,வின் அதிகார மையம், உதயநிதி, சபரீசன், கனிமொழி என்ற முக்கோணத்துக்குள் சிக்கித் தவிக்கிறது.

கனிமொழி ஓரணி, சபரீசன் ஓரணி, இவர்களை எதிர்த்து, அன்பில் மகேஷ் போன்றவர்கள் வாயிலாக, உதயநிதி ஓரணியை உருவாக்கி, அரசியல் செய்து வருகின்றனர். மொத்தத்தில் கட்சி, குடும்ப அரசியலில் மாட்டிதிக்குமுக்காடுகிறது. இவற்றை எல்லாம், ஸ்டாலினால் சமாளிக்க முடியவில்லை. கட்சியினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். ஒரு கட்சியின் தோல்வி பொதுமக்களால் மட்டும் அல்ல... கட்சியினர் மத்தியில் எழும் அதிருப்தியாலும்தீர்மானிக்கப்படும்.


தே.மு.தி.க., அழிவுக்கும், அ.தி.மு.க., தோல்விக்கும், கட்சியினர் மத்தியில் உருவான அதிருப்தியே காரணம். விரைவில், தி.மு.க.,வும் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும்.பொள்ளாச்சி பாலியல் சம்பவம் வெளியான போது, தி.மு.க.,வினர் எவ்வளவு குதித்தனர். ஆனால், தங்கள் கட்சியினர் மீதான பாலியல் புகார்களுக்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


மாறாக, இத்தகைய புகாரில் சிக்கிய, திருச்சி சிவா, பெரிய கருப்பன் போன்றோருக்கு பதவி கொடுத்து அழகு பார்க்கின்றனர். பா.ஜ.,விலும் கோஷ்டிப்பூசல் இருக்கிறது; பலர் மீது பாலியல் புகார்கள் உள்ளன.ஆனால், பாலியல் புகாருக்கு உள்ளானவர்களை கட்சியின் முக்கிய பொறுப்பிலிருந்து நீக்கி இருக்கின்றனர்; எந்த அதிகாரமும் இல்லாமல், 'டம்மி'யாக வைத்திருக்கின்றனர்.


உண்மையில், அமைச்சர் கே.என்.நேருவுக்கும், என் அப்பாவுக்கும் இடையேயான சண்டையால், தி.மு.க.,வில் எந்தப் பொறுப்பையும், என்னால் பெற முடியவில்லை.நான் கிறிஸ்தவ பெண்ணை மணந்ததால், என்னுடன் பேசுவதையே அப்பா நிறுத்தி விட்டார். திராவிடமும், மதச்சார்பின்மையும் பேசும் என் அப்பாவால், நான் மதம் மாறி திருமணம் செய்து கொண்டதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.


இப்படி இரட்டை வேடம் போடுபவர்கள் இருக்கும் இடத்தில், என்னால் நீடிக்க முடியாது.திருச்சி சிவாவின் மகன் என்ற அடையாளத்தையே அழித்து விட்டேன்.நான் பா.ஜ.,வுக்கு செல்கிறேன் என்றதும், தி.மு.க., முன்னாள் அமைச்சரான திருச்சி செல்வராஜின் மகன் கருணை ராஜா, 'என்னையும் அழைத்து செல்லுங்கள்' என்றார்.'முதலில் நான் செல்கிறேன்; பின்னர் உன்னை அழைத்து செல்கிறேன்' என்றுகூறினேன். தி.மு.க., வில் இருந்து பா.ஜ.,வில் இணைபவர்கள் எண்ணிக்கை இனி அதிகரிக்கும்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (6)

 • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

  சூரியா கட்சியைவிட்டே விலகிவிட்டார். இனி சூரியனின் ஒளி மங்கிவிடும் போலத்தான்.அவர் எங்கு சென்றிருக்கிறாரோ அங்கே சூரியனின் ஒளி நன்றாகவே கட்சியை பலப்படுத்தும்.

 • தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா

  பேசுனா பணம் கரெக்ட்டா கொடுத்துறங்க. இல்லேன்னா பிஜேபிக்கு எதிரா கருத்து சொல்லுவார் ...

 • mindum vasantham - madurai,இந்தியா

  பிஜேபி பார்ட்டி மக்கள் செல்வாக்கு கூடும் அடித்தட்டு மக்களின் பிரெச்சனையும் நெறய எடுத்து பேசுனா பிஜேபி யை யாரும் தடுக்க முடியாது

 • Muthu Kumarasamy - Mettupalayam, Coimbatore Dist.,இந்தியா

  தி.மு.க., வில் இருந்து பா.ஜ.,வில் இணைபவர்கள் எண்ணிக்கை இனி அதிகரிக்கும். மகிழ்ச்சி தி மு க வின் குறைகளை பா ஜ க கடுமையாக எதிர்த்து வருகிறது இந்த நிலையில் தி மு க விலிருந்து வருபவர்களை பா ஜ க வினர் கங்கையில் குளித்துவிட்டு வர சொல்வார்களா? அவர்களுக்கு அந்த கட்சியில் உரிய மரியாதை கிடைக்காததால் தான் பா ஜ க விற்கு வருகிறார்கள். கிடைத்திருந்தால் அங்கேயே இருந்திருப்பார்கள் .மாற்று கட்சியில் இருந்து வருபவர்களை விட, அண்ணாமலை மாதிரி கட்சி சார்பற்றவர்களை பா ஜ க சேர்த்துக்கொண்டால் நல்லது .

 • Vetri - Chennai,இந்தியா

  நைஸ் comedy

 • Naga Subramanian - Kolkatta,இந்தியா

  போகப் போக தெரியும். இந்த பூவின் வாசம் தெரியும். திமுகவிலிருந்து வந்தவர் என்பதால், இவரது நடவடிக்கைகளை, பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement