தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சின்னத்தம்பி: எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக, தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வது, ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து வருகிறது.
சமீபத்தில் கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவுக்கு சென்ற போது, இலங்கை மீனவர் சங்கப் பிரதிநிதிகளை சந்தித்து பேசினோம். அப்போது, 'தமிழகத்தில் மீன் பிடி தடை காலம் அறிவிக்கப்படும் அதே நேரத்தில் தான் இலங்கையிலும் அறிவிக்கப்படுகிறது. 'ஆனால் எங்களுக்கு தடை காலத்துக்கு பின் மீன் வளம் அதிகமாகிறது. தமிழக கடற்பரப்பில் மீன் வளம் குறைவாக இருக்கிறதே ஏன்?' என்று எங்களிடம் கேள்வி எழுப்பினர்.இது தொடர்பாக ஆய்வு செய்த போது தான், எங்களுக்கு அதிர்ச்சியான தகவல் கிடைத்தது.ராமநாதபுரம், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அதிக அளவில், பாலை மீன் குஞ்சுகள் காணப்படுகின்றன. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மட்டுமே இந்த மீன்கள் இனப்பெருக்கம் செய்யும்.அதற்காக தான் இரண்டு மாதங்கள் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்படுகிறது.இந்தியாவிலுள்ள மீன் குஞ்சுகள் பொரிப்பகத்தில், பாலை மீன் குஞ்சு உற்பத்தியை, இதுவரை மேற்கொள்ள முடியவில்லை. அதனால் ஆராய்ச்சிக்காகவும், சிறிய அளவிலான பண்ணைகளில் வளர்ப்பதற்காகவும், சில ஆயிரம் பாலை மீன் குஞ்சுகளை பிடிப்பதற்கு தமிழக மீன்வளத்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இந்த வாய்ப்பை பயன்படுத்தி, மீன் வளத்துறை அதிகாரிகள், பாலை மீன் குஞ்சுகளை லட்சக்கணக்கில் பிடித்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருக்கும் செயற்கை மீன் பண்ணைகளுக்கு விற்பனை செய்கின்றனர். ஆண்டுக்கு, 40 லட்சம் கிலோ வரை பிடிப்பதாக, குஜராத் ஆய்வாளர் ஒருவர் சொல்கிறார்.பாலை மீன்களை விரும்பி உண்ணும் பெரிய மீன்கள், இவை கிடைக்காததால் திரும்பவும் ஆழ்கடலுக்கு சென்று விடுகின்றன. அதனால் தான் கடலில் மீன் கிடைக்காமல், மீனவர்கள் எல்லை தாண்டி செல்ல வேண்டிய சூழல் உருவாகிறது.தமிழக மீன்வளத்துறை இயக்குனர் காத்தவராயன்: புரதச்சத்து நிறைந்தது இந்த பாலை மீன். மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பாம்பன், குத்துக்கால், காஞ்சிராங்குடி, வாலிநோக்கம் உள்ளிட்ட, பவளப்பாறைகள் அதிகம் உள்ள இடங்களில் மட்டுமே வளரக்கூடியது. ஆராய்ச்சிக்காவும், அரசு மீன்வளத்துறை பண்ணைகளுக்கு விற்பனைக்காகவும் ஆண்டுக்கு நான்கு லட்சம் பாலை மீன் குஞ்சுகளை பிடித்து கொடுத்து வருகிறோம்; 40 லட்சம் கிலோ என்று கூறுவதில் உண்மையில்லை. இதை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர்!
பாலை மீன்களைபிடிப்பதால் தான்பிரச்னை!
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!