Advertisement

சட்டசபையில் நன்றாக 'ஜால்ரா' அடிக்கின்றனர்!

சட்டசபைக்கு நேரத்துக்கு வருவதில்லை; மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் நிறைய கேள்விகள் கேட்கிறார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள காங்., - எம்.எல்.ஏ., விஜயதரணி:சட்டசபையில், நான் கேட்க வேண்டிய கேள்வி, 'லிஸ்ட்' ஆகியிருந்தால் முன்னரே செல்லலாம். நான் கொடுக்கும் கேள்விகள், கவன ஈர்ப்பு தீர்மானம் எதுவும் லிஸ்ட் ஆவதில்லை; விவாதங்களுக்கும் வருவதில்லை. அப்படி இருக்கையில், நேரத்துக்கு சட்டசபைக்கு சென்றால் மட்டும், என்னவாகி விடப்போகிறது? நான் தேர்ந்தெடுக்கப்பட்டதே மக்களின் பிரச்னைகளை, சட்டசபையில் கேட்பதற்காக தானே... ஆனால், அதற்கான வாய்ப்பு கொடுப்பதே இல்லை!சட்டசபையில், 28 நாட்களில், 54 துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடக்கிறது. இந்த குறுகிய காலகட்டத்தில், மக்களுக்கு தேவையானவற்றை கேட்டுப் பெற வேண்டும்.கேள்வி கேட்பதற்கான நேரம் ஒதுக்குவதில், சரியான திட்டமிடல் இருக்க வேண்டும் அல்லது சபை நடக்கும் நாட்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அ.தி.மு.க.,வின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில், நானே பலருக்கும் உதவி இருக்கிறேன். அப்போது, அந்த பெண்கள் அடையும் மகிழ்ச்சியை நேரடியாக பார்த்திருக்கிறேன்.உயர் கல்வி படிக்கும் பெண்களுக்கு 1,000 ரூபாய் வழங்குவதும், நல்ல திட்டம் தான் என்றாலும், அதனால், அனைத்து பெண்களும் பயனடைய போவதில்லை. ஏனெனில், இன்றைக்கு உயர் கல்விக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை குறைவு. எனவே, தாலிக்கு தங்கம், உயர் கல்விக்கு உதவித்தொகை என, இரண்டு திட்டத்தையும் அரசு செயல்படுத்த வேண்டும்.தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர் திருவிழாவின் போது, தேரில் மின்சாரம் பாய்ந்து, 11 பேர் உயிரிழந்தது தொடர்பாக, சட்டசபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது பேசிய செல்வப்பெருந்தகை, ஜெயலலிதா ஆட்சியில் நடந்த மகாமகம் துயரத்தை குறிப்பிட்டு, அநாகரிகமான கருத்தை பதிவு செய்தார். அதை அப்போதே கண்டித்ததோடு, சபைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றேன்; அதை யாரும் காதில் வாங்கவில்லை. முதல்வரை புகழ்வதில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களிடையே போட்டி இருக்கிறது. இவர்கள் எதற்காக புகழ்கின்றனர் என்பதெல்லாம் புரியாதவரா முதல்வர்! 'புகழ்ச்சி எல்லாம் வேண்டாம்' என முதல்வர் நேரடியாக சொல்லியும், இந்த 'ஜால்ரா'க்கள் புகழ்கின்றனர் என்றால், அவரை கஷ்டப்படுத்த வேண்டும் என்றே, அதை செய்கின்றனர் என தோன்றுகிறது.முதல்வரே கூச்சப்படும் அளவுக்கு ஜால்ரா அடிக்கின்றனர். அதை, அவர் விரும்பவும் இல்லை; அது, இவர்களுக்கு புரியவும் இல்லை.

Advertisement
 

Home வாசகர் கருத்து (10)

 • bal - chennai,இந்தியா

  நீ காங்கிரெஸ்த்தானே..கூட்டு களவாணிதானே...திமுகவுடன்..பின்னர் ஏன் முதலை கணீர்..முக கூட சபைக்கு பத்து வருடம் வந்ததேயில்லை..என்ன தமிழகம் குறைந்த போனது.

 • sankar - Nellai,இந்தியா

  செல்வப்பெருந்தகை- திமுக மெம்பரைவிட அதிகமா ஜால்றா போட்டு காத்து ஜவ்வு கிழியுது

 • sethusubramaniam - chennai,இந்தியா

  பாத்து பேசுமா விஜயதாரணி . ஸ்டாலின் , கண்ணசைச்சா அழகிரி உங்களை கட்சியிலிருந்து நீக்கிடுவாரு.

 • S.R.Arul - Chennai,இந்தியா

  Reality is different, If CM said don't price me.... these dump MLA's are force to price him & his loduku Son. Since they are from cinema background .. these are just an flavor .... But need to think twice to give any thing free ... Ex Srilanka's today happening

 • Girija - Chennai,இந்தியா

  விரும்பவில்லை என்று யார் சொன்னது ?

 • RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ

  இப்படியெல்லாம் பயமுறுத்துனா நான் பயந்து அழுதுருவேன் .....

 • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

  காங்கிரசில் இங்கேயும் விரிசல் கண்டுவிட்டது. இனி அதை யாராலுமே அடைக்கவே முடியாது.

 • RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ

  அம்மா ...... உங்க காங்கிரசில் கூட இதே கதைதான் .....

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  மேடத்துக்கு பட்டி செலவு அதிகமாக இருக்கும் போலிருக்கிறதே? ஒருவேளை வீட்டுக்கு வெள்ளை அடித்தவர் முகத்துக்கும் அடித்திருப்பாரோ?

 • selva kppk - kuala lumpur,மலேஷியா

  ……

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement