Advertisement

.'நீட்' தேர்வால்கறுப்புப் பணம் தடுக்கப்பட்டது!

ஐ.ஜே.கே., கட்சியின் தலைவரும், தி.மு.க., சின்னத்தில் போட்டியிட்டு, எம்.பி.,யானவருமான பாரிவேந்தர்: 'தி.மு.க., சின்னத்தில் போட்டியிட்டு எம்.பி.,யான பின், பா.ஜ.,வை பாராட்டுவது தான் கூட்டணி தர்மமா?' என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. முதலில் ஒன்றை சொல்லி விடுகிறேன்... 2014 லோக்சபா தேர்தலை போலவே, 2019 தேர்தலிலும், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்கவே விரும்பினோம்.


ஆனால், அவர்களுக்கே அ.தி.மு.க., கூட்டணியில், ஐந்து தொகுதிகள் தான் கிடைத்தன. அதில், ஒன்றை கொடுப்பர் என்று எதிர்பார்த்தோம்; கொடுக்கவில்லை. அதனால், 'தி.மு.க, கூட்டணியில் இணையலாம்' என்று கட்சியினர் கோரிக்கை வைத்ததால், கூட்டணி அமைத்தோம். தி.மு.க., தோழமை கட்சி என்றாலும், எங்களுக்கென தனி கொள்கைகள் இருக்கின்றன. தி.மு.க., சின்னத்தில் வென்றிருந்தாலும், எங்கள் கொள்கையை விட்டுக் கொடுக்க முடியாது. தி.மு.க.,வின் நட்பை விட, பா.ஜ.,வுடனான எங்களது நட்பு நெடியது.
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு எம்.பி.,யானதால், இன்னும் இரண்டு ஆண்டுகள் பெயரளவுக்கு, தி.மு.க.,வுடன் இருந்தாக வேண்டியது அவசியம். 2024 லோக்சபா தேர்தலுக்கு, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்; எனக்கு தேசியம் தான் முக்கியம்.தனிப்பட்ட முறையில், முதல்வர் ஸ்டாலினை பிடிக்கும். ஜென்டில்மேன்; நல்ல உழைப்பாளி. தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களிலும் ஸ்டாலினின் புகழ் பரவி வருகிறது.அதேசமயம், நலத்திட்டங்கள் என்ற பெயரில், இலவசங்களை கொடுத்து, மக்களை சோம்பேறிகள் ஆக்குகின்றனர். மக்கள் சுயமாக சம்பாதித்து, கண்ணியத்துடன் வாழும் நிலையை ஏற்படுத்தி கொடுக்கும் அரசே, சிறந்த அரசு!உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்கப் போவதாக தகவல்கள் வருகின்றன. உதயநிதி விஷயத்தில், அவசரம் தேவையில்லை. ஆட்சி நன்றாக சென்று கொண்டிருக்கும் போது, ஸ்டாலின் மீது அதிருப்தி ஏற்படலாம்; இது கட்சிக்கும், குடும்பத்துக்கும் நல்லதல்ல
. பொதுவாக, வாரிசு அரசியலானது கட்சியை வளர்க்கவும், கட்சியை அடுத்த தலைமுறையினரிடம் எடுத்துச் செல்லவும் மட்டுமே பயன்பட வேண்டும்; ஒரு போதும் அரசு பதவியில் வாரிசை திணிக்கக் கூடாது.'நீட்' தேர்வு வந்த பிறகே, மிகப்பெரிய பிரச்னையில் இருந்து வெளியே வந்தேன். வசதியானவர்கள் பணத்தை கொட்டிக் கொடுத்து, படிப்பை வியாபாரமாக்கி வந்தனர்; இடைத்தரகர்கள் கொள்ளையடித்தனர். நீட் வந்த பின், கட்டணம் உட்பட எல்லாமே வெளிப்படையாக நடக்கின்றன; கறுப்புப் பணம் தடுக்கப்பட்டுள்ளது.

Advertisement
 

Home வாசகர் கருத்து (20)

 • Rangarajan - Ambathur,இந்தியா

  சாத்தான் வேதம் ஒதுகிறது அரசுநிலங்களை ஆக்கிரமித்து கல்லூரி கட்டியவர் இவரே.

 • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

  \\.'நீட்' தேர்வு வந்த பிறகே, மிகப்பெரிய பிரச்னையில் இருந்து வெளியே வந்தேன்...\\ என்ன பிரச்சினை இருந்தது? யார் அதை உருவாக்கினார்கள்? கொஞ்சம் சொன்னால் நன்றாக இருக்கும்... எப்போ கட்சியின் கொள்கைகளை விட்டுக் கொடுக்கமுடியாது என்று தீர்மானமாக சொல்கிறாரோ, அதை ஒட்டி, 3 வருடங்களுக்கு (இல்லை சென்ற வருடமோ) முன்னரே NEET தொடர்பான இந்த கருத்தை சொல்லியிருக்கலாமே ?

 • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

  \\வாரிசு அரசியலானது கட்சியை வளர்க்கவும், கட்சியை அடுத்த தலைமுறையினரிடம் எடுத்துச் செல்லவும் மட்டுமே பயன்பட வேண்டும்\\ ஏன் வெளியாளுங்க வந்தா இதெல்லாம் பண்ண முடியாதா? ஒரு நிறுவனம் அப்படின்னு எடுத்துக்கிட்டா (இவரோட SRM பல்கலையையே எடுத்துப்போம்), அதிலே நிறுவனரின் உழைப்பு மட்டுமல்ல, அவற்றின் மூலதனமும் இருக்கிறது. ஆதலால், அதில் நிறுவனருக்குப் பின் அவரது வாரிசுகள், சொந்தக்காரர்கள் வருவதில் ஒரு நியாயம் உண்டு.. ஆனால் கட்சி என்பதை நிறுவியவர் ஒருவராக இருந்தாலும், அதில் மூலதனம் போட்டவர் அவர் ஒருவர் மட்டுமல்ல.... கட்சி உறுப்பினர்களும் உண்டு.. அங்கே வாரிசு அரசியல் எப்படி சரியாகும்?

 • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

  \\தோழமை கட்சி என்றாலும், எங்களுக்கென தனி கொள்கைகள் இருக்கின்றன\\ ... என்ன கொள்கைகள் இருக்கின்றன என்பதை விளக்கலாமே? மக்கள் நலப்பணி என்று ஏதேனும் கொள்கை இருக்கிறதா? இந்த 3 வருடங்களில் தொகுதி மக்களுக்கு என்னென்ன பணிகள் செய்திருக்கிறார் ?

 • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

  \\ஆனால், அவர்களுக்கே அ.தி.மு.க., கூட்டணியில், ஐந்து தொகுதிகள் தான் கிடைத்தன. அதில், ஒன்றை கொடுப்பர் என்று எதிர்பார்த்தோம்\\ ... அவங்களுக்கு கெடைச்ச 5 தொகுதிகளிலே இவர் எப்படி ஒன்றை எதிர்பார்த்தார் ?

 • Veluvenkatesh - Coimbatore,இந்தியா

  உண்மையா சொன்னா நீங்கதான் இப்ப ஜென்டில்மேன். மக்களே நல்லா கேட்டுக்கங்க இந்த திருட்டு கூட்டம் ஏன் நீட் தேர்வு வேண்டாம் என்று புலம்புகிறார்கள் என்று, கண்டிப்பா இவனுங்க மீண்டும் சமசீர் கொண்டுவந்து மாணவர்களை மக்கு பண்ணுவாங்க பாருங்க,

 • ponssasi - chennai,இந்தியா

  கல்வியை வியாபாரமாக்கியத்தில் பெரும் பங்கு பச்சமுத்துவையே சேரும்.

 • அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா

  அதான் வெளிப்படையா சொல்லிட்டாரே.. அடுத்த வாட்டி பாஜகவில் சேருவாரு... இல்லாட்டி பாஜகவோடு கூட்டணி.. என்னடா... இது... ஊப்பீஸுக்கு வந்த சோதனை.....

 • Sandru - Chennai,இந்தியா

  தோ பாருடா கருப்பு பணத்தை பத்தி பச்சை முத்து பேசுகிறார்

 • RJNESH - perambalur,இந்தியா

  நல்ல காமெடி ..இந்தவருடம் உங்கள் மருத்துவ கல்லூரியில் ( கண் மருத்துவ மேற்படிப்புக்கு மற்றும் அறுவை சிகிச்சை மேற்படிப்புக்கு ) டொனேஷன் இல்லாமல் சேர்க்கை நடைபெற்றதுன்னு சொல்லமுடியுமா? தாங்கள் உதவியாளர் ஒவ்வொறு சீட்கும் ருபாய் ஐம்பது லட்சம் வாங்கேகொண்டு தான் இரண்டு சீட்டும் அட்மிஷன் போட்டார் (ஸ்ட்ரெய் வெய்க்கானசி )..

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement