Advertisement

பள்ளிகளில் மனித உரிமைகள் பாடம் வேண்டும்!

'லாக் அப்' மரணங்கள் குறித்து, முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி ஜி.திலகவதி: தமிழகத்தில், காவல் துறை - பொதுமக்கள் விகிதம் மிகக் குறைவு. காவல் துறையில் உள்ள ஒருவர், வாரம், 72 மணி நேரம் வரை பணியாற்றும் நிர்ப்பந்தத்தில் இருக்கிறார். இந்த கடும் பணிச் சுமையால், காவலர்கள் பெரும் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். ஐ.பி.சி., - சி.ஆர்.பி.சி., மற்றும் தடயவியல், விசாரணை முறை, உளவியல் என, ஏராளமானவற்றை குறுகிய காலத்தில் அறிய வேண்டிய அளவுக்கு, காவலர்களின் பயிற்சி காலம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இப்படிப்பட்ட பயிற்சிகளோடு, ஏராளமான அதிகாரமும் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. அந்த அதிகாரத்தை யார் மீது, எப்போது, எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை சொல்லி கொடுக்க வேண்டியது அவசியம். ஒருவரை கைது செய்யும் போது, பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை, புகழ்பெற்ற டி.கே.பாசு வழக்கில், உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. எனவே, கைது செய்வதையே தண்டனையாக மாற்றக்கூடாது. கைது செய்யப்படும் நபருக்கோ, தனக்கிருக்கும் உரிமைகள் பற்றி எதுவும் தெரிவதில்லை. அப்படிப்பட்ட நபர்கள் தான், 'லாக் அப்' மரணம் போன்ற கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். கடந்த, 1980களில் இது பற்றி ஆய்வு செய்த அருண் சவுரி, 'ஏழைகள், வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளவர்கள் மற்றும் சிறுபான்மையினரே, பெரும்பாலும் இதுபோன்ற சித்ரவதைகளுக்கு ஆளாகின்றனர்' என்று கூறியுள்ளார். இன்றும், அதே நிலை தான் தொடர்கிறது. நீதித்துறையின் ஒத்துழைப்பில், காவல் துறையினர் இது போன்ற குற்றங்களில் இருந்து தப்பிக்க வழிவகுப்பது துரதிருஷ்டவசமானது.மனித உரிமை என்றால் என்ன, அவற்றை மீறாமல் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி, காவலர்களுக்கு சொல்லித் தர வேண்டும். டாணாக்காரன் திரைப் படத்தின் இயக்குனர், தமிழ்: காக்கி உடை தனக்கு வானளாவிய அதிகாரத்தை வழங்குவதாக, பெரும்பாலான காவலர்கள் கருதுவதே பிரச்னையின் அடிப்படை. அந்த அதிகாரம் யார் மீது செலுத்தப்படுகிறது என்பதும் கவனத்துக்குரியது. அடித்தால் கேட்க ஆளில்லாத, எந்தப் பின்புலமும் இல்லாத எளியவர்களே, போலீஸ் காவலில் சித்ரவதைக்கு உள்ளாகின்றனர்; இறந்தும் போகின்றனர். அவர்களை தாக்கும் காவலரும், ஒரு எளிய பின்புலத்திலிருந்து வந்தவராகவே இருப்பார். அவரும் திட்டமிட்டு அடிப்பது இல்லை. தனக்கு வழங்கப்பட்டு இருப்பதாக, அவர் நம்பும் அதிகாரத்தை இப்படியான நபர்கள் மீது செலுத்துகிறார்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (5)

 • Nancy - London,யுனைடெட் கிங்டம்

  காவல் துறையை - அரசு ரௌடி துரைன்னு மாத்தணும் , காவல் துறையை உச்ச நீதி மன்றம் நடத்தணும்

 • Murthy - Bangalore,இந்தியா

  திராவிட அஆட்சியின் அவலங்களின் ஒன்று....

 • raja - Cotonou,பெனின்

  திமுகா ஆட்சியில் தான் அதிக லாக் அப் மரணங்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனவே.. அப்போ தெலுங்கு திமுகவும் ஒரு காரணியாக இருக்க கூடும் என்று தமிழர்கள் நினைக்கிறார்கள் ....

 • Girija - Chennai,இந்தியா

  அதனால் தான் செங்கல்பட்டு சிறையில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சிறை காவலர்களை விடுவித்தீர்களா? யாருக்கு இல்லை பனி சுமை? தனியார் நிறுவங்களில் வேலை செய்யும் ஊழியர்களின் நிலையை பாருங்கள்? வேலை உத்திரவாதம் கிடையாது, வாரிசுக்கு வேலை கிடையாது, பென்சுன் கிடையாது. இப்பொழுது ஐ டி யம் இந்த லிஸ்டில் இணைந்துவிட்டது, ஒர்க் பிரேம் ஹோம், ஆபீஸ் வரவேண்டாம், டிரான்ஸ்போர்ட் கட், காபி டி கான்டீன் அவசியமில்லை, பெரிய ஆபீஸ் பில்டிங் அவசியமில்லை, செக்கூரிட்டி அவசியமில்லை, டாய்லெட், ரெஸ்ட்ரூம் அவசியமில்லை. தலைக்கு ஒரு டேபிள் சேர், லாப் டாப், இன்டர்நெட் க்கு காசு அவ்வளவுதான். வீட்டிற்கு அனுப்பப்படும். லாப்டாப் வேலை செய்ய்யவில்லை என்று முன்பு மாதிரி ஒபி அடிக்கமுடியாது, ஊழியர்களே அதை பாதுகாக்கவேண்டும், முன்பு போல் வீட்டில் குழந்தைகளை விளையாட கொடுத்து பெப்சி சிப்ஸ் கொட்டி அடுத்தநாள் ஆபிசில் புகார் செய்ய்யமுடியாது, மீட்டிங் எல்லாம் ஸ்கேய்ப்பில் வேலை செய்யும் நேரம் ஆட்டோ மீட்ர் போல் ஓடும் அதற்கேற்ப சம்பளம், எல்லாம் கிளவுட் கம்ப்யூட்டிங் முறையில். ஒரு வேளை செந்தில் பாலாஜி புண்ணியத்தில் அடிக்கடி பவர் கட் என்று நிரூபிக்க முடிந்தால் ஒபி அடிக்க முடியும். அரசு ஊழியர்கள் ஆசிர்வதிக்க பட்டவர்கள். ஓய்வுக்கு பின்னும் உங்கள் வீட்டில் எத்தனை ஆர்டாரளிகள் வேலை செய்கின்றனர் ? அவர்கள் சம்பளத்தை உங்களால் கொடுக்க முடியுமா?

 • Suri - Chennai,இந்தியா

  வால்டர் தேவாரம் சௌக்கியமா இருக்கிறாரா?

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement