Advertisement

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியது தவறு!: திருநாவுக்கரசர்

காங்., கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.,யுமான திருநாவுக்கரசர்: நுாற்றாண்டை கடந்த பாரம்பரியம் கொண்ட காங்., கட்சியில், அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்களும், இளம் தலைவர்களும் நிறைய பேர் இருக்கின்றனர்.

அறிவுக்கும், அனுபவத்துக்கும் காங்கிரசில் பஞ்சமில்லை.தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், பல கட்சிகளுக்கும் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுப்பதை போல, காங்கிரஸ் கட்சிக்கும் வியூகங்களை வகுத்துக் கொடுக்கலாம்; அதில் தவறில்லை. ஆனால், கட்சியில் சேர்ந்து செயல்பட்டால் அது அவருக்கும் நல்லதல்ல... காங்கிரசுக்கும் நல்லதல்ல.

பல கட்சிகளுக்கு வியூகங்களை வகுத்துக் கொடுத்த ஒருவரை, திடீரென சேர்த்துக் கொள்வதால் கட்சிக்குள் பல சங்கடங்கள் உருவாகும். அவர் கொடுக்கும் ஆலோசனைகளை செயல்படுத்த முடியாமல், கட்சியை விட்டு அவர் வெளியேறினால், அது காங்கிரசுக்கு பலவீனம் தானே!தமிழக காங்., கமிட்டிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட இருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன.


முதியவர்களிலும் இளைஞர்கள் உண்டு; இளைஞர்களிலும் முதியவர்கள் உண்டு. வயது குறைந்த ஒருவர் வயதானவர் போல செயல்படுவார்; வயதான ஒருவர் இளைஞர் போல செயல்படுவார். ஒருவரது மனநிலை, அறிவாற்றல், அவர் செயல்படும் விதம் போன்றவற்றை பொறுத்து தான் எப்படிப்பட்ட தலைமை என்பதை தீர்மானிக்க முடியும்.அ.தி.மு.க.,வில், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் யாரும் சசிகலாவை கட்சியில் சேர்த்துக் கொள்ள தயாராக இல்லை.

சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே சசிகலா, சிறையிலிருந்து விடுதலை ஆகி விட்டார். தேர்தல் நேரத்தில் சுற்றுப்பயணம் போயிருக்கலாமே... அப்போது ஏன் ஒதுங்கி இருந்தார்? கிட்டத்தட்ட, 50 ஆண்டுகாலம் அரசியல் அனுபவம் கொண்டவனாக சொல்கிறேன்... சசிகலா தன் உடல்நலனை கவனித்து, இருக்கிற சொத்துக்களைக் காப்பாற்றியபடி, நிம்மதியாக ஓய்வெடுப்பது தான் அவருக்கு நல்லது.

சட்டமேதையும், மிகப் பெரிய தலைவருமான அம்பேத்கரை பிரதமர் மோடியுடன் ஒப்பிடவே முடியாது; ஒப்பிடவும் கூடாது. இளையராஜா ஓர் இசை மேதை; அவர் அரசியல்வாதி கிடையாது. மோடி மீதான பிரியம் காரணமாக, அவரை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசி விட்டார். அதற்காக இளையராஜாவை, ஜாதியைக் குறிப்பிட்டு எங்கள் கட்சிக்காரர், ஈ.வி.கே. எஸ்.இளங்கோவன் விமர்சித்திருப்பது மிகவும் தவறு!

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • vadivelu - thenkaasi,இந்தியா

    எல்லோரும் ஏதாவது ஒரு விடயத்தில் ஒன்றாக இருக்கலாம், அதனால் அதை குறிப்பிட்டு ஒப்பிடலாம். நடிகர் திலகம் சிவாஜி கணேசனை போல் கமல் நடிப்பதாக ஒப்பிடலாம், என்ன தவறு. அதே போல்தான் அம்பேர்காரின் சில கொள்கைகள் மோடியின் செயல்களுடன் ஒப்பிட்டுள்ளார் இளையராஜா. என்ன தவறு. அதென்ன அவ்வளவு வன்மம் தமிழகத்திலுள்ள சிலருக்கு. உங்களால் உங்களின் ஆதர்வாவு வாக்குகளி தக்க வைக்கத்தான் முடியும். அதன் அளவு உங்களுக்கே தெரியும். மோடியின் அல்லாஹ்வும் அதேதான், அதை உங்களால் குறைக்க முடியாது.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement