Advertisement

டி–20 'சரவெடி'... இந்தியா 'ரெடி' * இங்கிலாந்துடன் இன்று மோதல்

சவுத்தாம்ப்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 'டி-20' தொடர் இன்று துவங்குகிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இதில் சிறப்பாக செயல்பட்டு கோப்பை வெல்லக் காத்திருக்கிறது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி மூன்று 'டி-20', மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் 'டி-20' போட்டி இன்று சவுத்தாம்ப்டனில் நடக்கிறது. சமீபத்திய போட்டிகளில் சோதனை முயற்சியாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டது. தற்போது சீனியர்கள் அணிக்கு திரும்புகின்றனர்.

'டி-20' தரவரிசையில் 'நம்பர்-1' ஆக உள்ள இந்திய அணி, உலக கோப்பை தொடருக்கு முன் 15 'டி-20' போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இதனால் சரியான அணியை கண்டறிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக களமிறங்குகிறார்.

கொரோனா காரணமாக ஐந்தாவது டெஸ்டில் பங்கேற்காத இவர், இன்று இந்திய அணிக்கு துவக்கம் தரும் பட்சத்தில், காயத்தால் அவதிப்பட்ட ருதுராஜுக்கு இடம் கிடைக்காது. இஷான் கிஷான் துவக்கம் தருவது உறுதி.

'மிடில் ஆர்டரில்' அயர்லாந்து தொடரில் சதம் விளாசி மிரட்டிய 'ஆல் ரவுண்டர்' தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் கூட்டணி களமிறங்க காத்திருக்கிறது. பின் வரிசையில் ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக் ஜோடி ரன்குவிப்புக்கு கைகொடுக்கலாம். வெங்கடேஷ் இடம் பெறுவது உறுதியில்லாமல் உள்ளது.

பவுலிங் எப்படி

பந்துவீச்சை பொறுத்தவரையில் புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல் இணைந்து வலிமையான இங்கிலாந்து பேட்டர்களுக்கு சிக்கல் தருவர் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அயர்லாந்து தொடரில் நம்பிக்கை தந்த உம்ரான் மாலிக் இடம் பெறுவாரா என இன்று தெரியும். சுழலில் மீண்டும் சகால் இடம் பெற உள்ளார்.

புதிய கேப்டன்

உலக அரங்கில் 'நம்பர்-2' அணி இங்கிலாந்து. மார்கன் ஓய்வு பெற்றதை அடுத்து பட்லர் தலைமையில் களமிறங்குகிறது. டெஸ்ட் தொடரில் மிரட்டிய பேர்ஸ்டோவ், ஸ்டோக்சிற்கு ஓய்வு தரப்பட்டது சற்று நிம்மதி என்றாலும், லிவிங்ஸ்டன், டேவிட் மலான், ஜேசன் ராய் தொல்லை தர காத்திருக்கின்றனர்.

பந்துவீச்சில் டேவிட் வில்லே, டாப்லே, டைமல் மில்ஸ் உள்ளனர். ஐ.பி.எல்., அனுபவம் வாய்ந்த 'ஆல் ரவுண்டர்' மொயீன் அலி, சாம் கர்ரானுடன் ஜோர்டனும் இந்திய வீரர்களுக்கு சிக்கல் தர முயற்சிக்கலாம்.அட்டவணை

'டி-20', ஒருநாள் போட்டி அட்டவணை:

தேதி போட்டி இடம் நேரம்

இன்று முதல் 'டி-20' சவுத்தாம்ப்டன் இரவு 10:30 மணி

ஜூலை 9 2வது 'டி-20' பர்மிங்காம் இரவு 7:00 மணி

ஜூலை 10 3வது 'டி-20' நாட்டிங்காம் இரவு 7:00 மணி

ஜூலை 12 முதல் ஒருநாள் ஓவல் மாலை 5:30 மணி

ஜூலை 14 2வது ஒருநாள் லார்ட்ஸ் மாலை 5:30 மணி

ஜூலை 17 3வது ஒருநாள் மான்செஸ்டர் மதியம் 3:30 மணிமழை வருமா

முதல் 'டி-20' நடக்கவுள்ள சவுத்தாம்ப்டனில் வெப்பநிலை அதிகபட்சம் 25, குறைந்தபட்சம் 13 டிகிரி செல்சியசாக இருக்கும். வானம் தெளிவாக காணப்படும். மழை வர வாய்ப்பு இல்லை.10

இந்தியா, இங்கிலாந்து அணிகள் 19 'டி-20' போட்டிகளில் மோதின. இதில் இந்தியா 10, இங்கிலாந்து 9ல் வென்றன.

* இரு அணிகள் கடைசியாக மோதிய 4 'டி-20'ல் இந்தியா 3ல் வென்றது.வருவாரா கோஹ்லி

ஐந்தாவது டெஸ்டில் பங்கேற்ற கோஹ்லி, ஸ்ரேயாஸ், பும்ரா, ஜடேஜா, ரிஷாப் பன்டுக்கு முதல் 'டி-20'ல் ஓய்வு தரப்பட்டுள்ளது. இவர்கள் இரண்டாவது போட்டியில் இருந்து பங்கேற்க உள்ளனர்.Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement