Advertisement

ஷிகர் தவான் கேப்டன்: விண்டீஸ் தொடருக்கு

புதுடில்லி: விண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித், கோஹ்லி உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் செல்லவுள்ள இந்திய அணி, மூன்று ஒருநாள், ஐந்து 'டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. மூன்று ஒருநாள் போட்டிகளும் போர்ட் ஆப் ஸ்பெயினில் வரும் ஜூலை 22, 24, 27ல் நடக்கவுள்ளன. ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.



இதில் 'ரெகுலர்' கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராத் கோஹ்லி, விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட், 'ஆல்-ரவுண்டர்' ஹர்திக் பாண்ட்யா, வேகப்பந்துவீச்சாளர்களான முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. கேப்டனாக ஷிகர் தவான், துணை கேப்டனாக ரவிந்திர ஜடேஜா அறிவிக்கப்பட்டுள்ளனர்.



இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு தேர்வு செய்யப்படாத தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், அவேஷ் கான் இடம் பிடித்துள்ளனர். கடைசியாக 2020ல் ஒருநாள் போட்டியில் விளையாடிய சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.



இந்திய அணி: ஷிகர் தவான் (கேப்டன்), ரவிந்திர ஜடேஜா (துணை கேப்டன்), ருதுராஜ், சுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாகூர், யுவேந்திர சகால், அக்சர் படேல், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.



டிரினிடாட், செயின்ட் கிட்ஸ், புளோரிடாவில் நடக்கவுள்ள ஐந்து போட்டிகள் (ஜூலை 29, ஆக. 1, 2, 6, 7) கொண்ட 'டி-20' தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படவில்லை.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement