Advertisement

ரிஷாப் பன்ட் 'நம்பர்–5': ஐ.சி.சி., டெஸ்ட் தரவரிசையில்

துபாய்: ஐ.சி.சி., டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ரிஷாப் பன்ட், 5வது இடத்துக்கு முன்னேறினார்.

டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட், 801 புள்ளிகளுடன் 10வது இடத்தில் இருந்து முதன்முறையாக 'நம்பர்-5' இடத்தை கைப்பற்றினார். பர்மிங்காம் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 146 ரன் விளாசிய இவர், 2வது இன்னிங்சில் 57 ரன் எடுத்தார். இப்போட்டியில் சோபிக்காத முன்னாள் இந்திய கேப்டன் விராத் கோஹ்லி (714 புள்ளி), 13வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதன்மூலம் இவர், கடந்த 6 ஆண்டுகளில் முதன்முறையாக 'டாப்-10' பட்டியலில் இடம் பிடிக்க தவறினார். இப்போட்டியில் விளையாடாத 'ரெகுலர்' கேப்டன் ரோகித் சர்மா (746), 8வது இடத்தில் இருந்து 9வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.



முதல் நான்கு இடங்களில் முறையே இங்கிலாந்தின் ஜோ ரூட் (923), ஆஸ்திரேலியாவின் லபுசேன் (879), ஸ்டீவ் ஸ்மித் (826), பாகிஸ்தானின் பாபர் ஆசம் (815) நீடிக்கின்றனர். மற்றொரு இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ் (742) 10வது இடத்துக்கு முன்னேறினார்.



பவுலர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ் (900), இந்தியாவின் அஷ்வின் (842), பும்ரா (828) முதல் மூன்று இடங்களை தக்கவைத்துக் கொண்டனர். 'ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் முதலிரண்டு இடங்களில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா (384), அஷ்வின் (335) தொடர்கின்றனர்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement