Advertisement

நாலுக்கு நாலு... நெல்லை 'டாப்' * அருண் கார்த்திக் சதம் வீண்

நத்தம்: டி.என்.பி.எல்., தொடரில் தொடர்ந்து நான்காவது வெற்றி பெற்றது நெல்லை. மதுரை அணியின் அருண் கார்த்திக் சதம் வீணானது.

தமிழகத்தில் டி.என்.பி.எல்., தொடரின் ஆறாவது சீசன் நடக்கிறது. நத்தம் என்.பி.ஆர்., மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் மதுரை, நெல்லை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற மதுரை அணி கேப்டன் சதுர்வேத், பீல்டிங் தேர்வு செய்தார்.

சஞ்சய் கலக்கல்

நெல்லை அணிக்கு நிரஞ்சன், ரஞ்சன் பால் (10) ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. நிரஞ்சன் 46 ரன்னில் (27 பந்து) அவுட்டானார். பாபா அபராஜித் 27 பந்தில் 34 ரன் எடுத்தார். சஞ்சய் யாதவ் மூன்றாவது அரைசதம் எட்டினார். நெல்லை அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 209 ரன் எடுத்தது. கடைசி 46 பந்தில் 100 ரன் சேர்த்த சஞ்சய் (70 ரன், 42 பந்து), இந்திரஜித் (34) ஜோடி அவுட்டாகாமல் இருந்தது.

அருண் நம்பிக்கை

கடின இலக்கைத் துரத்திய மதுரை அணிக்கு பாலசந்தர் (1) அதிர்ச்சி கொடுத்தார். தோள்பட்டை காயமடைந்த ஆதித்யாவுக்குப் பதில் மாற்று வீரராக பேட்டிங் செய்த ராஜ்குமார் 4 ரன் எடுத்தார். கேப்டன் சதுர்வேத் 27, கவுசிக் 21 ரன் எடுத்தனர். சாந்து (4), சற்குணம் (3) ஏமாற்றினர். அருண் கார்த்திக் 53வது பந்தில் சதம் விளாசினார். கடைசி ஓவரில் அருண் கார்த்திக் (106 ரன், 57 பந்து) அவுட்டானார்.

மதுரை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 183 ரன் மட்டும் எடுத்து, 26 ரன்னில் தோற்றது. இதுவரை மோதிய 4 போட்டியிலும் வெற்றி பெற்ற நெல்லை அணி 8 புள்ளியுடன் பட்டியலில் 'டாப்' ஆக உள்ளது.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement