துபாய்: ஐ.சி.சி., ஒருநாள் பேட்டர் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா 8வது இடத்துக்கு முன்னேறினார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியானது. இலங்கைக்கு எதிராக இரண்டாவது ஒருநாள் போட்டியில் 83 பந்தில் 94 ரன் விளாசிய இந்திய துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 25, பேட்டர்களுக்கான தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி, 8 வது இடம் பிடித்தார். 'டாப்-10' பட்டியலில் இடம் பெற்ற இந்திய பேட்டர் இவர் ஒருவர் தான்.
இந்திய அணியின் புதிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், 14வது இடத்தில் தொடர்கிறார். முதல் மூன்று இடங்களில் ஆஸ்திரேலியாவின் அலிசா, இங்கிலாந்தின் நடாலியே சிவர், ஆஸ்திரேலியாவின் பேத் மூனே உள்ளனர்.
ராஜேஸ்வரி முன்னேற்றம்
பவுலர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமி 39, 6வது இடத்தில் நீடிக்கிறார். மற்றொரு இந்திய வீராங்கனை ராஜேஸ்வரி ஒரு இடம் முந்தி 11வது இடம் பெற்றார். இரண்டு இடம் முன்னேறிய தீப்தி, 16வது இடத்தில் உள்ளார்.
'ஆல் ரவுண்டர்' வரிசையில் தீப்தி, 7 வது, ஜூலன் கோஸ்வாமி, 11வது இடத்தில் உள்ளனர்.
ஸ்மிருதி மந்தனா 'நம்பர்–8' * ஒருநாள் தரவரிசையில் முன்னேற்றம்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!