Advertisement

பைனல் வாய்ப்பு: பட்லர் நம்பிக்கை

கோல்கட்டா: ''தகுதிச் சுற்று-2ல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, பைனலுக்கு தகுதி பெறுவோம்,'' என, ராஜஸ்தானின் பட்லர் தெரிவித்துள்ளார்.

கோல்கட்டாவில் நடந்த 15வது 'டி-20' கிரிக்கெட் தொடருக்கான தகுதிச் சுற்று-1ல் ராஜஸ்தான் அணி (188/6, 20 ஓவர்) 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியிடம் (191/3, 19.3 ஓவர்) தோல்வியடைந்தது. இருப்பினும், புள்ளிப்பட்டியலில் 2வது இடம் பிடித்த ராஜஸ்தான் அணி, பைனலுக்கு தகுதி பெற மற்றொரு வாய்ப்பு உள்ளது. இப்போட்டியில் துவக்கத்தில் தடுமாறிய பட்லர், முதல் 38 பந்தில் 39 ரன் மட்டும் எடுத்திருந்தார். பின் எழுச்சி கண்ட இவர், அடுத்த 18 பந்தில் 50 ரன் விளாச, 88 ரன் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.



பைனல் வாய்ப்பு குறித்து பட்லர் கூறியது: பைனலுக்கு நேரடியாக முன்னேற முடியாமல் போனது வருத்தம். இருப்பினும் 'டாப்-2' வரிசையில் இடம் பிடித்ததால், இன்னொரு வாய்ப்பு இருப்பது ஆறுதலான விஷயம். துவக்கத்தில் ரன் சேர்க்க கடுமையாக இருந்தது. இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் வேகமாக ரன் எடுக்க முயற்சித்து விக்கெட்டை பறிகொடுப்பதைவிட, நிதானமாக விளையாடுவதே சிறந்தது என்று முடிவு செய்தேன். சிறப்பாக விளையாடிய கேப்டன் சஞ்சு சாம்சன், என் மீதான நெருக்கடியை குறைத்தார்.

குஜராத் அணியின் ஹர்திக் பாண்ட்யா, டேவிட் மில்லர் 'பாார்ட்னர்ஷிப்' எங்களுக்கு பாதகமாக அமைந்தது. இவர்களை விரைவில் அவுட்டாக்கி இருக்க வேண்டும். அடுத்து போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பைனலுக்கு முன்னேற முயற்சிப்போம்.

இவ்வாறு பட்லர் கூறினார்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement