Advertisement

ரவிந்திர ஜடேஜா 'நம்பர்–1': ஐ.சி.சி., டெஸ்ட் தரவரிசையில்

துபாய்: ஐ.சி.சி., டெஸ்ட் 'ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா 'நம்பர்-1' இடத்தில் நீடிக்கிறார். பவுலர்களுக்கான தரவரிசையில் தமிழகத்தின் அஷ்வின், 2வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

டெஸ்ட் அரங்கில் சிறந்த விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டுள்ளது. இதில் 'ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா, 385 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். தமிழகத்தின் அஷ்வின் (341 புள்ளி) 2வது இடத்தில் நீடிக்கிறார்.



பவுலர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் அஷ்வின், 850 புள்ளிகளுடன் 'நம்பர்-2' இடத்தில் நீடிக்கிறார். இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா (830) மூன்றாவது இடத்தில் தொடர்கிறார். 'நம்பர்-1' இடத்தை ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ் தக்கவைத்துக் கொண்டார்.



பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா (754 புள்ளி), விராத் கோஹ்லி (742) முறையே 8, 10வது இடத்தில் நீடிக்கின்றனர். முதல் மூன்று இடங்களை முறையே ஆஸ்திரேலியாவின் லபுசேன் (892), ஸ்டீவ் ஸ்மித் (845), நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் (844) தக்கவைத்துக் கொண்டனர்.

வங்கதேசத்தின் லிட்டன் தாஸ் (662), இலங்கையின் மாத்யூஸ் (641) முறையே 17, 21வது இடத்துக்கு முன்னேறினர்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement