Advertisement

புதிய கேப்டன் பாண்ட்யா * அயர்லாந்து தொடருக்கு

புதுடில்லி: அயர்லாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்படுவார் எனத் தெரிகிறது.

இந்திய அணி அயர்லாந்து சென்று டப்ளினில் நடக்கும் இரண்டு ஒருநாள் போட்டிகள் (ஜூன் 26, 28) கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணி பயிற்சியாளராக முன்னாள் வீரர் லட்சுமண் நியமிக்கப்பட்டார். இந்திய அணி கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட உள்ளார்.

இந்தியாவில் நடக்கும் 'டி-20' கிரிக்கெட் லீக் தொடரில் குஜராத் கேப்டனாக சிறப்பாக செயல்படும் பாண்ட்யா (14 போட்டி, 453 ரன், 5 விக்.,), அணியை பைனலுக்கு கொண்டு சென்றுள்ளார்.

பந்துவீச்சிலும் சராசரியாக 140 கி.மீ., வேகத்துக்கும் மேல் வீசுகிறார். தவிர ரிஷாப் பன்ட், லோகேஷ் ராகுல் இங்கிலாந்தில் நடக்கும் டெஸ்டில் பங்கேற்க சென்றுவிடுவர். தவானும் அணியில் சேர்க்கப்படாத நிலையில் பாண்ட்யா கேப்டனாக தேர்வு செய்யப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய அணி தேர்வுக்குழு உறுப்பினர் ஒருவர் கூறுகையில்,'' 'டி-20' தொடரில் பாண்ட்யா பொறுப்பான கேப்டனாக செயல்பட்டு, அனைவரையும் கவர்ந்துள்ளார். அயர்லாந்து தொடரில் இவரை கேப்டனாக நியமிக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. வரும் தென் ஆப்ரிக்க தொடரின் போது, இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement