Advertisement

மாத்யூஸ், தனஞ்செயா அரைசதம்

மிர்புர்: வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இலங்கையின் மாத்யூஸ், தனஞ்செயா அரைசதம் கடந்தனர்.

வங்கதேசம் சென்றுள்ள இலங்கை அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் 'டிரா' ஆனது. இரண்டாவது டெஸ்ட் மிர்புரில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 365 ரன் எடுத்தது. இரண்டாவது நாள் முடிவில், முதல் இன்னிங்சில் இலங்கை அணி 2 விக்கெட்டுக்கு 143 ரன் எடுத்திருந்தது. கருணாரத்னே (70), ரஜிதா (0) அவுட்டாகாமல் இருந்தனர்.



மூன்றாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணியின் கருணாரத்னே (80), சாகிப் அல் ஹசன் 'சுழலில்' சிக்கினார். பின் இணைந்த மாத்யூஸ், தனஞ்செயா டி சில்வா ஜோடி பொறுப்பாக ஆடியது. வங்கதேச பந்துவீச்சை எளிதாக சமாளித்த இவர்கள் இருவரும் அரைசதம் கடந்தனர். ஐந்தாவது விக்கெட்டுக்கு 102 ரன் சேர்த்த போது சாகிப் பந்தில் தனஞ்செயா (58) அவுட்டானார்.



முதல் இன்னிங்சில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்கு 282 ரன் எடுத்து, 83 ரன் பின்தங்கி இருந்த போது போதிய வெளிச்சமின்மை காரணமாக மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. மாத்யூஸ் (58), தினேஷ் சண்டிமால் (10) அவுட்டாகாமல் இருந்தனர். வங்கதேசம் சார்பில் சாகிப் 3 விக்கெட் கைப்பற்றினார்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement