Advertisement

வெல்லுமா...வெளியேறுமா * பெங்களூரு–லக்னோ மோதல்

கோல்கட்டா: கோல்கட்டாவில் இன்று நடக்கும் 'எலிமினேட்டர்' போட்டியில் பெங்களூரு, லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இந்தியாவில் நடக்கும் 'டி-20' கிரிக்கெட் லீக் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கும் 'எலிமினேட்டர்' போட்டியில் புள்ளிப்பட்டியலில் 3, 4வது இடம் பிடித்த லோகேஷ் ராகுலின் லக்னோ, டுபிளசியின் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதில் வெல்லும் அணி ஆமதாபாத்தில் மே 27ல் நடக்கும் இரண்டாவது தகுதிச்சுற்றில் பங்கேற்கலாம். மாறாக தோற்கும் அணி தொடரில் இருந்து வெளியேறும்.

பெங்களூருவை பொறுத்தவரையில் 14 போட்டியில் 8 வெற்றி பெற்றது. பேட்டிங்கில் டுபிளசி (443), கோஹ்லி (309), மேக்ஸ்வெல் (268) பலம் சேர்க்கின்றனர். பின் வரிசையில் சிறப்பாக 'பினிஷிங்' செய்ய, ரன் மழை பொழிய தினேஷ் கார்த்திக் (287) இருப்பது, கோஹ்லி கடைசி போட்டியில் 73 ரன் விளாசியவை கூடுதல் பலம்.

பந்துவீச்சில் ஹசரங்கா (24 விக்.,), ஹர்ஷல் படேல் (18), ஹேசல்வுட் (15) கூட்டணி எதிரணிக்கு அச்சம் தரலாம். மேக்ஸ்வெலும் (6) ஆறுதல் தருகிறார்.

ராகுல் பலம்

லக்னோ லீக் சுற்றில் 9 போட்டியில் வெற்றி பெற்றது. ராகுல் 2 சதம், 3 அரைசதம் உட்பட 537 ரன் விளாசியுள்ளார். குயின்டன் டி காக் (502), தீபக் ஹூடா (406) தங்கள் பங்கிற்கு ரன் சேர்க்கின்றனர்.

பந்து வீச்சில் அவேஷ் கான் (17), ஹோல்டர் (14), மொசின் கான் (13), பிஷ்னோய் (9), சமீரா (9) என பலரும் விக்கெட் வேட்டை நடத்துவது அணிக்கு கைகொடுக்கலாம்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement