Advertisement

ஷபாலி, லாரா அபாரம் * சரிந்தது ஹர்மன்பிரீத் அணி

புனே: பெண்களுக்கான 'டி-20' சேலஞ்ச் லீக் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் அணி 7 விக்கெட்டில் தோல்வியடைந்தது. ஷபாலி, லாரா அரைசதம் விளாசினர்.

புனேயில், பெண்களுக்கான 'டி-20' சேலஞ்ச் கிரிக்கெட் 4வது சீசன் நடக்கிறது. நடப்பு சாம்பியன் டிரையல்பிளாசர்ஸ், சூப்பர்நோவாஸ், வேலாசிட்டி என மூன்று அணிகள் மோதுகின்றன. நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் சூப்பர்நோவாஸ், வெலாசிட்டி அணிகள் மோதின.

'டாஸ்' வென்ற வெலாசிட்டி அணி கேப்டன் தீப்தி சர்மா, பீல்டிங் தேர்வு செய்தார்.

ஹர்மன்பிரீத் ஆறுதல்

சூப்பர்நோவாஸ் அணிக்கு பிரியா புனியா (4), தீன்ட்ரா (6) ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. ஹர்லீன் 7 ரன் மட்டும் எடுத்தார். பின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், தானியா பாட்யா இணைந்து அணியை மீட்க முயற்சித்தனர். நான்காவது விக்கெட்டுக்கு 82 ரன் சேர்த்த போது, தானியா (36) ரன் அவுட்டானார்.

கடைசி நேரத்தில் பவுண்டரி மழை பொழிந்த ஹர்மன்பிரீத் கவுர் அரைசதம் கடந்தார். இவர் 51 பந்தில் 71 ரன் எடுத்து அவுட்டானார். சூப்பர்நோவாஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 150 ரன் மட்டும் எடுத்தது. சுனே லஸ் (20), பூஜா (2) அவுட்டாகாமல் இருந்தனர். கேட் கிராஸ் 2 விக்கெட் சாய்த்தார்.

ஷபாலி அபாரம்

வெலாசிட்டி அணிக்கு ஷபாலி, சந்தம் (1) ஜோடி சுமார் துவக்கம் கொடுத்தது. யஸ்திகா 17 ரன்னில் போல்டானார். மறுபக்கம் பவுண்டரி மழை பொழிந்த ஷபாலி, 30 வது பந்தில் அரைசதம் எட்டினார். இவர் 51 ரன் எடுத்து அவுட்டானார். பின் இணைந்த லாரா, கேப்டன் தீப்தி சர்மா ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.

வெலாசிட்டி அணி 18.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 151 ரன் எடுத்து வெற்றி பெற்றது. லாரா (51), தீப்தி (24) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement