Advertisement

இலங்கை அணி பதிலடி * கருணாரத்னே அரைசதம்

மிர்புர்: வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இலங்கை அணி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

வங்கதேசம் சென்ற இலங்கை அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் 'டிரா' ஆனது. இரண்டாவது டெஸ்ட், மிர்புரில் நடக்கிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 5 விக்கெட்டுக்கு 277 ரன் எடுத்திருந்தது.

ரஜிதா 'ஐந்து'

நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு 272 ரன் சேர்த்த நிலையில் லிட்டன் தாஸ் (141), ரஜிதா 'வேகத்தில்' வெளியேறினார். தய்ஜுல் 15 ரன் எடுத்தார். வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 365 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. முஷ்பிகுர் ரகிம் (175) அவுட்டாகாமல் இருந்தார். இலங்கை சார்பில் ரஜிதா 5, அசிதா 4 விக்கெட் சாய்த்தனர்.

கருணாரத்னே அரைசதம்

முதல் இன்னிங்சை துவங்கிய இலங்கை அணிக்கு ஒசாடா, கேப்டன் கருணாரத்னே ஜோடி சிறப்பான துவக்கம் கொடுத்தது. இருவரும் அரைசதம் விளாசினர். முதல் விக்கெட்டுக்கு 95 ரன் சேர்த்த போது, ஒசாடா (57) அவுட்டானார்.

குசல் மெண்டிஸ் (11) நிலைக்கவில்லை. இரண்டாவது நாள் முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 143 ரன் எடுத்து, 222 ரன் பின்தங்கி இருந்தது. கருணாரத்னே (70), ரஜிதா (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement