Advertisement

தனுசு

தனுசு: சுக்கிரன், புதன், கேது நன்மை வழங்குவார்கள். குரு பகவானை மனதில் எண்ணி செயல்படுங்கள்.
மூலம்: ஞாயிறு மதியம் வரை நீங்கள் ஈடுபடும் செயல்களில் எதிர்பார்த்த நன்மைகளை அடைவீர்கள். தொழிலில் உங்கள் அனுகுமுறைகள் லாபத்தை ஏற்படுத்தும். அதன்பின் சந்திராஷ்டமம் தொடங்குவதால் புதிய முயற்சிகள் வேண்டாம்.
பூராடம்: லாப ஸ்தான கேதுவால் உங்கள் முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றியை அடைவீர்கள். ஞாயிறு மதியம் முதல் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சந்திரனால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்
உத்திராடம் 1: வாரத்தின் முற்பகுதியில் நீங்கள் திட்டமிட்டிருந்த செயல்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும். ஞாயிறு மதியம் உங்கள் செயல்களில் தடைகள் தோன்றும் என்பதால் விழிப்புணர்வு அவசியம்.
சந்திராஷ்டமம்: 11.12.2022 மதியம் 1:31 மணி - 14.12.2022 நள்ளிரவு 1:07 மணி

Advertisement
 
Advertisement
Advertisement