கன்னி: சுக்கிரன், சூரியன், செவ்வாய் நன்மைகளை வழங்குவர். ராமநாத சுவாமியை வழிபட வளம் உண்டாகும்.
உத்திரம் 2,3,4: தன ஸ்தான சுக்கிரனும் தைரிய ஸ்தான செவ்வாய் சூரியனும் ஆதாயத்தை வழங்குவர். எதிர்பார்த்த வருமானம் வரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். ஜென்ம ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் புதிய முயற்சிகளில் எச்சரிக்கை அவசியம்.
அஸ்தம்: உங்கள் நட்சத்திராதிபதி வாரத்தின் முதல் மூன்று நாட்களும் ஆதாயத்தை வழங்குவார். சாதுரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். நெருக்கடி விலகும். இரண்டாமிட சுக்கிரனால் முயற்சிகளில் லாபம் உண்டாகும் வருமானம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
சித்திரை 1,2: சுக்கிரன், சூரியன்,செவ்வாயின் சஞ்சார நிலைகளால் உங்கள் எண்ணம் பூர்த்தியாகும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். வெளி வட்டாரத்தில் சாதுரியமாக செயல்பட்டு சிறப்படைவீர். திங்கள் செவ்வாயில் செலவு அதிகரிக்கும்.