சிம்மம் : கேது, குரு, சூரியன், புதன், சுக்கிரன் நன்மைகளை வழங்குவர். அனுமனை வழிபட சங்கடம் போகும்.
மகம் : உங்கள் எண்ணம் நிறைவேறும் வாரம் இது. உங்கள் முயற்சி வெற்றி பெறும். நிதிநிலை உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். ஞானக்காரகன் அருளால் செயல்களில் எதிர்பார்த்த நன்மைகளை அடைவீர். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும்.
பூரம்: வாரத்தின் முற்பகுதியில் ஒருசிலர் புதிய வாகனம் வாங்குவீர். ஒரு சில செயல்களை யோசிக்காமல் செய்து அதில் லாபம் அடைவீர். உங்கள் செல்வாக்கு உயரும். மதிப்பும் மரியாதையும் கூடும். வருமானம் அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பம் விலகி உற்சாகம் அதிகரிக்கும்.
உத்திரம் 1: பத்தாமிடத்தில் சஞ்சரிக்கும் உங்கள் ராசிநாதனால் உங்கள் முயற்சி வெற்றியாகும். மூன்றாமிட கேதுவின் அருளால் நீண்ட நாட்களாக மனதை வாட்டிக் கொண்டிருந்த பிரச்னைகள் விலகும். உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். அரசு பணியாளர்கள் பாராட்டப்படுவீர்கள்.