மிதுனம்: சுக்கிரன், ராகு நன்மைகளை வழங்குவர். திருநள்ளாற்று நாயகனை மனதில் எண்ணி வழிபட வளம் கூடும்.
மிருகசீரிடம் 3, 4: விருப்பம் பூர்த்தியாகும் வாரம் இது. இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும். வேலை தேடியவர்களுக்கு எதிர்பார்த்த வேலை அமையும். அந்நியர்களால் ஆதாயம் அதிகரிக்கும். திங்கள் முதல் புதன் மாலை வரை செயல்களிலும் செலவிலும் கவனம் தேவை.
திருவாதிரை: லாப ஸ்தான ராகுவால் நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரத்தில் புதுமையை புகுத்துவீர்கள். தடைபட்ட வருவாய் வர ஆரம்பிக்கும். முயற்சி வெற்றி பெறும். திங்கள் முதல் புதன் மாலை வரை செயல்களில் கவனம் தேவை. எதிர்பாராத செலவு தோன்றும்.
புனர்பூசம் 1, 2, 3: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். புதிய முயற்சிகள் பலிதமாகும். வேலையின்றி இருந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். திங்கள் காலை வரை செயல்கள் எளிதாக நிறைவேறும். அதன்பின் கவனித்து செயல்பட வேண்டியதாக இருக்கும். மற்றவரை அனுசரித்துச் செல்வதால் நன்மை உண்டு.