Advertisement

ரிஷபம்

ரிஷபம்: சுக்கிரன், புதன், சூரியன், ராகு நன்மைகளை வழங்குவர். காளிகாம்பாளை வழிபட முயற்சி வெற்றியாகும்.
கார்த்திகை 2,3,4: வாரத்தின் முதல் நாளில் செலவு அதிகரிக்கும். அதன்பின் உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் வரும். பத்தாமிட சூரியனால் செயல் கைகூடும். புதிய இடம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். வருமானத்தில் இருந்த தடை விலகும்.
ரோகிணி: லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு உங்கள் சிரமங்களை விரட்டி அடிப்பார். எதிர்பார்த்த வருமானத்தை உண்டாக்குவார். வெளிநாட்டு முயற்சி பலிக்கும். எதிர்ப்பு இல்லாமல் போகும். ஜீவன ஸ்தான சூரியனால் உங்கள் செல்வாக்கு உயரும். பொன்பொருள் சேர்க்கை உண்டாகும். மறைமுக எதிர்ப்பு விலகும்.
மிருகசீரிடம் 1,2: உத்தியோகத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி முன்னேற்றம் அடையும். ஜீவன ஸ்தான சூரியனும் லாப ராகுவும் உங்கள் செயல்களில் முன்னேற்றத்தை உண்டாக்குவர். பணம் பல வழியிலும் வரும். நெருக்கடி விலகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும்.

Advertisement
 
Advertisement
Advertisement