Advertisement

மேஷம்

மேஷம்: புதன், சுக்கிரன் சந்திரன் நன்மை வழங்குவர். குலதெய்வ வழிபாடு நலம் தரும்.
அசுவினி: உங்கள் எண்ணம் ஈடேறும் வாரம் இது. குடும்பத்தில் சுபநிகழ்ச்சிக்கு வாய்ப்புண்டாகும். வரவுகள் அதிகரிக்கும். உங்கள் செயல்களில் லாபம் காண்பீர்கள்.
பரணி: உங்கள் எண்ணம் எளிதாக நிறைவேறும். எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். செயல்களில் அனுகூலம் தோன்றும். அரசு வழியிலான முயற்சிகள் பலிதமாகும்.
கார்த்திகை 1ம் பாதம்: உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். புதிய சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும். புதிய நட்புகளிடம் அதிகமான நெருக்கம் வேண்டாம். எதிர்பாலினரிடம் எச்சரிக்கை அவசியம்.

Advertisement
 
Advertisement
Advertisement