Advertisement

NRIஆல்பம்

01 Dec 2023

தாய்லாந்தில் லாய் க்ரத்தோங் என்ற பெயரில் கார்த்திகை கொண்டாடப் படுகிறது. வாழை மட்டையைக் கொண்டு மிதக்கும் விளக்குகளை உருவாக்கி, நீர் நிலைகளில் மிதக்க விடுகிறார்கள். பேங்காக் ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயத்தின் மேல் பகுதியில் மாட விளக்குகள் ஏற்றப்பட்டு, சொக்கப்பனை கொளுத்தப்பட்டது 0

28 Nov 2023

சீனாவில் உள்ள ஷாங்காயில் தீபாவளி விழா ( படம் : நமது செய்தியாளர் சித்ரா சிவகுமார்) 0

24 Nov 2023

அநுராதபுர இராசதானியில் 44 ஆண்டுகள் (கி.மு 161---105) முதல் 200 ஆண்டு காலப்பகுதியில் ஆட்சியிலிருந்த பத்து கள் எண்பது ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி புரிந்த தமிழ் மன்னரான எல்லாள மன்னன் வெளியிட்ட நாணயங்கள் 0

19 Nov 2023

தமிழக கலாச்சாரத்துடன் பின்னி பிணைந்துள்ள மலேசியா நாட்டின் தூதரகம் சார்பாக, அதன் தூதர் டத்தோ ஜோஜி சாமுவேல், தாய்லாந்து வாழ் மலேசியர்கள் மற்றும் பல விருந்தினர்களை அழைத்து, தீபாவளிக் கொண்டாட்டங்களை, இந்திய தாய்லாந்து வர்த்தக சபை வளாகத்தில் சிறப்பாக நடத்தினார் 0

15 Nov 2023

தாய்நாந்து தலைநகர் பேங்காக் மகா மாரியம்மன் ஆலயத்தில், தீபாவளியை முன்னிட்டு, மகா லெட்சுமி உருவச் சிலைக்கு, ஆகம விதிப்படி அனைத்து பூஜைகளும் நடத்தப்பட்டு, ஆலயம் அமைந்துள்ள பான் ரோட்டில் ஊர்வலம் நடைபெற்றது. சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தரிசனம் செய்தனர் 0

08 Nov 2023

கலாநிதி பட்டம் பெற்ற இலங்கை கே. ஈஸ்வரலிங்கத்திற்கு, தினகரன் வாரமஞ்சரியின் ஆசிரிய பீடத்தில் நடத்தப்பட்ட கெளரவிப்பு விழா 0

06 Nov 2023

இலங்கை ஊடகவியலாளர் கே. ஈஸ்வரலிங்கத்துக்கு இறம்பொடை தொண்டமான் கலாச்சார நிலையத்தில் நடத்தப்பட்ட முத்தமிழ் விழாவில் அமெரிக்க தமிழ்ப் பல்கலைக்கழகம் மாண்புறு முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்தது 0

27 Oct 2023

தாய்லாந்து பாங்காக்கில் நவராத்திரி இறுதி நாளான விஜயதசமி அன்று, பிரமாண்டமான தேர் திருவிழாவாக சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க, விநாயகர், முருகன், கிருஷ்ணர், காத்தவராயன், முப்பெருந்தேவியர் தேர்கள் உலா வந்தன 0

27 Oct 2023

ஹாங்காங்கின் டிஸ்கவரி பே என்னும் இடத்தில் பன்னாட்டு பண்பாட்டு விழாவின்போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் இந்திய நடனங்களை கற்கும் இந்திய பெண்களும் சீனரும் குழந்தைகள் கலை குழுவின் சார்பில் இந்திய நடனங்களை சிறப்புடன் ஆடினர் 0

22 Oct 2023

பேங்காக் ஸ்ரீமகா மாரியம்மன் ஆலய நவராத்திரி விழாவில் 7 ம் நாள் நவராத்திரி எப்பொழும் போல் கூடுதல் சிறப்பாக, சிவபெருமான் அன்னை ஸ்ரீமகாதேவியின் திருக்கல்யாண வைபவம், மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நடைபெறும் அதே பாணியில் நடைபெற்றது 0
 
Advertisement