30 Nov 2023
ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் டெக்ஸ்டைல் வர்த்தக கண்காட்சியை ஷார்ஜா வர்த்தகம் மற்றும் தொழில் சபையின் துணைத் தலைவர் வலீத் அப்துல் ரஹ்மான் புகாதிர் திறந்து வைத்தார். இந்த கண்காட்சியில் இந்தியாவைச் சேர்ந்த நிறுவனங்கள் அதிக அளவில் பங்கேற்றன
29 Nov 2023
துபாயில் அமீரகத்தின் 52வது தேசிய தினத்தை முன்னிட்டு இந்தியர் நலவாழ்வு பேரவை துபாய் மண்டலம் சார்பாக மாபெரும் இரத்ததான முகாம் அல் பரஹா மருத்துமனையில் மிகச் சிறப்பாக நடைபெற்றதுஇரத்த தானம் செய்த சகோதரர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது
28 Nov 2023
துபாய் கவனீஜ் பகுதியில் உள்ள எமிரேட்ஸ் நேஷனல் பள்ளி அரங்கில், இசைக் கலைஞர் சந்தான கோபாலன் தலைமையில் 30 க்கும் மேற்பட்ட இசை ஆசிரியர்கள், 300 க்கும் மேலான மாணவ மாணவிகள், 9 பாடல்களை 7 வித இசைக் கருவிகளை இசைத்த பக்க வாத்திய கலைஞர்களுடன் சேர்ந்திசையாக வழங்கினர்
28 Nov 2023
அஜ்மானில் உள்ள ஹீலியோ பூங்காவில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அமீரகப் பிரிவின் சார்பில் 52வது அமீரக தேசிய தின விழா கொண்டாட்டம் மற்றும் ஒன்றுகூடல் நிகழ்ச்சி வெகு சிறப்புடன் நடந்தது
26 Nov 2023
கத்தாரிலுள்ள இந்திய தூதரகத்தின் இந்திய கலாச்சார மய்யத்தின் சார்பில் தமிழ் மொழிக்கான இலக்கிய மன்ற முதல் அமர்வில் ஒருங்கிணைப்பாளர் ஷாந்தனு, பொதுச்செயலாளர் மோகன்குமார், இலக்கிய பயிற்சியாளர்கள் விஜய் ஆனந்த், ரெஜினா, சிந்து தமிழ், தஸ்தகீர் சுலைமான், மனோ கௌதம், சிவசங்கர்
25 Nov 2023
பஹ்ரைன் நாட்டின் தலைநகர் மனாமாவில் இந்திய தூதரகத்தில் தூதர் வினோத் குரியன் ஜேக்கப் தலைமையில் நடந்த தொழிலாளர் குறைதீர்க்கும் முகாமில் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் தங்களது பிரச்சனைகள் குறித்து ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பெற்றனர்
24 Nov 2023
ஷார்ஜா ஐ.டி.எம்.சர்வதேச பல்கலைக்கழகத்தில் உலக ஆராய்ச்சி கருத்தரங்க பேரவையின் சார்பில் சர்வதேச கல்வி கருத்தரங்கு, நூல் வெளியீடு, விருது வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் கூடிய முப்பெரும் விழா நடந்தது
22 Nov 2023
ஷார்ஜா சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள மேனா வாட்டர் நிறுவனத்தில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் இலவச பல் மருத்துவ முகாம் நடந்தது. டாக்டர் சிராஜுதீன் தலைமையிலான மருத்துவ குழுவினர் இந்த முகாமை மேற்கொண்டனர்
21 Nov 2023
காசாவில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் இந்திய அரசு அனுப்பிய இரண்டாம் உதவி சிறப்பு விமானத்தில் வந்த பொருட்களை இந்தியதூதரக அதிகாரி பெற்று அதனை செம்பிறை சங்க அதிகாரிகளிடம் வழங்கினார்
19 Nov 2023
துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா, அஜ்மான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை கடுமையான மழை பெய்தது. இந்த மழை காரணமாக சாலைகளின் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடானது. இதனால் ஆங்காங்கே கார் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கிக் கொண்டன